Maruti Suzuki Swift Dzire Mileage in Tamil
சைக்கிள் வைத்திருப்பவர்கள் வண்டி வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். வண்டி வைத்திருப்பவர்கள் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெரும்பாலானவர்களுக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது. நீங்கள் கார் வாங்க வேண்டும் திட்டமிட்டுளீர்கள் என்றால் நமது பதிவில் நிறைய வகையான கார்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மாருதி காரை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
மாருதி சுஸுகி ஸ்ட்ராங் ஹைப்ரிட்:
புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் ஆகிய 2 கார்களும், இந்திய சந்தையில் வரும் 2024-ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன.
2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்
மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் 2 புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த 2 புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்கள் குறித்து, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.
ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் புதிய தலைமுறை மாடல்களில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குகிறது. இந்த 2 கார்களிலும், ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது.
இந்த இன்ஜின் ஆனது ஒரு லிட்டருக்கு 35-40 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்குமாம். இப்படி ஒரு அம்சம் வந்துவிட்டால் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களாக இந்த இரண்டும் இருக்கும்.
கிராண்ட் விட்டாராவின் மைல்ட் மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வகைகளுக்கு இடையேயான விலை வித்தியாசம் தற்போது ரூ.2.6 லட்சமாக உள்ளது. இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் அடுத்த ஜென் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கலப்பினங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன், மாருதி அதன் விலையை மேலும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் 2 மாதங்களில் சந்தைக்கு வரும் பல சிறப்பம்சங்கள் கொண்ட காரை பற்றி தெரியுமா..?
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |