Maruti Swift மற்றும் Hyundai i10 இரண்டில் எது சிறந்தது..?

Advertisement

Maruti Swift and Hyundai i10 

இன்றைய பதிவில் Maruti மற்றும் Hyundai இந்த இரண்டு கார்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த கால கட்டத்தில் அனைவருக்குமே சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கார் வாங்கும் முன் அந்த கார் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் நாம் எந்த கார் சிறந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதவு பயனுள்ளதாக இருக்கும்.

Toyota மற்றும் Hyundai இரண்டில் எது சிறந்தது..?

Maruti Swift and Hyundai i10 Comparison in Tamil:

Maruti Swift and Hyundai i10

மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகிய கார் நிறுவனங்கள் நீண்ட காலமாக இந்திய வாகனத் துறையில் ஆட்சி செய்து வருகின்றன. இந்த இரண்டு ஆட்டோ நிறுவனங்களுமே சிக்கனமான Hatchbacks, Compact Sedans, SUVs மற்றும் பலவகையான வசதிகளை வழங்குகிறது.

மாருதி சுசுகி கார் நிறுவனம் பொதுவாக இந்தியாவின் சொந்த பிராண்ட் என்று அழைக்கப்படுகிறது. இருந்தாலும் அது ஜப்பானின் தாய் நிறுவனமான சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனுக்கு என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தில் சுமார் 40,000 பேர் பணியாற்றுகின்றனர்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் என்பது இந்தியாவில் அதிகம் பேசப்படும் ஓரு வார்த்தை என்று சொல்லலாம். இந்த நிறுவனத்தின் தலைமையகம் தென் கொரியாவின் சியோலில் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மேலும், இந்த நிறுவனம் உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 104,700 -க்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரின் விலை தோராயமாக ₹ 5.91 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விலை தோராயமாக ₹ 5.00 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 1197 சிசி இன்ஜினில் 2 எரிபொருள் வகை கிடைக்கிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 1197 சிசி இன்ஜினில் 2 எரிபொருள் வகை கிடைக்கிறது. Maruti Suzuki Swift – 22.38 kmpl மைலேஜையும், Hyundai Grand i10 – 19.77 kmpl மைலேஜையும் வழங்குகிறது.

Used கார் வாங்குகிறீர்கள் என்றால் இதை கவனித்து வாங்குங்கள்..!

Maruti Suzuki Swift (VS) Hyundai Grand i10:

Maruti Suzuki Swift (VS) Hyundai Grand i10

Key Highlights Swift Grand i10
Price ₹ 5.91 Lakh ₹ 5.00 Lakh
Engine Capacity 1197 cc 1197 cc
Power 89 bhp 81 bhp
Transmission Automatic Automatic
Fuel Type Petrol Petrol
Mileage
22.38 kmpl
19.77 kmpl
Max Power  89 bhp @ 6000 rpm 81 bhp @ 6000 rpm
Driving Range (Km) 828
Max Torque 113 Nm @ 4400 rpm 114 Nm @ 4000 rpm
Bootspace 268  256
Fuel Tank Capacity (litres) 37 43

 

இதையும் படியுங்கள் ⇒ கார் ஓட்டும் போது எச்சரிக்கை செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடுகள் என்ன சொல்கிறது..?

2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்..! 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement