TATA Nexon EV
நமக்கு இருக்கும் கனவுகளில் ஒன்று கார். அப்படி நாம் விரும்பும் கார், சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாமல் எளிமையான முறையில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். இப்போது சந்தையில் பல வகையான கார்கள் இருந்தாலும் அவற்றின் விலை மற்றும் என்ஜின் பயன்பாடு நமக்கு ஒரு வித தயக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டும்மல்லாமல் வாகனத்தின் வேகம், மேற்பரப்பின் தன்மை, பயன்படுத்தப்படும் உலோகத்தின் தன்மை இப்படி பல சந்தேகங்கள் இருக்கும். இவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது என்ஜின் செயல்பாடு. டீசல் என்ஜின் சிறந்ததா அல்லது பெட்ரோல் என்ஜின் சிறந்ததா என்று பல குழப்பங்கள் இருக்கும்.
ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு சிறந்தது மின்சார வாகனங்கள் இவை சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானதாக இருப்பதால் இவற்றின் பயன்பாடு வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்றைய பதிவில் TATA நிறுவனத்தின் EV கார் Nexon EV பற்றிய அடிப்படை தகவல்களையும் விலை பற்றியையும் தெரிந்த்திக்கொள்ளவோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
TATA Nexon EV in Tamil
Tata Nexon EV கார் இந்தியாவின் மிகவும் பிரபலமான மின்சார வாகனம் ஆகும். Tata Nexon EV கார் 9 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது.
2020 ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட TATA Nexon EV மாற்ற EV வாகனங்களுடன் ஒப்பிடும் போது நவீன வசதிகளுடன் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
Tata Nexon EV -வின் சிறப்புகள்:
TATA Nexon EV, 204 bhp மின்சார மோட்டார் மற்றும் 320 Nm torque திறனை கொண்டது.
0 முதல் 100 கிலோமீட்டரை அடைய 9.9 வினாடிகள் மட்டும் எடுத்துக்கொள்ளும்.
EV கார்களில் மிகவும் வேகமான காராக Nexon EV உள்ளது.
30.2 kWh Lithium-Ion Battery Nexon EV க்கு அதிக திறனை வழங்குகிறது. இந்த பேட்டரி மூலம் ஒரு முறை சார்ஜ் செய்து அதிகபட்சம் 312 கி.மீ வரை பயணிக்கலாம்.
Nexon EV, அதிநவீன instrument cluster and 7 inch touchscreen-னில் தெலைபேசி இணைப்பு போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
TATA Nexon EV-யில் Multifork Power Outlets உள்ளது. இவை நமது வசதிக்கு ஏற்ப கைப்பிடிகள் மடிக்கக்கூடியதாக உள்ளது. உட்புறம் தரம் மற்றும் வசதிகள் மாற்ற EV வாகனங்களில் இருந்து மாறுபட்டு அதிக வசதிகளுடன் காணப்படுகிறது.
வெளிப்புற அமைப்பு பாதுகாப்பானதாகவும் உயர்ந்த தரத்திலும் காணப்படுகிறது.
TATA Nexon EV காரின் ஆரம்ப விலை இந்தியாவில் 14.74 லட்சம் முதல் கிடைக்கிறது.
TATA Nexon EV காரின் விலை பட்டியல்:
Model | Price |
Creative Plus Medium | 14,74,000 |
Fearless Medium Range |
16,19,000 |
Fearless Plus Medium Range | 16,69,000 |
Fearless Plus S Medium Range | 17,19,000 |
Fearless Long Range | 18,19,000 |
Fearless Plus Long Medium Range | 18,69,000 |
Fearless Plus S Long Medium Range | 19,19,000 |
Empowered Medium Rang |
17,84,000 |
Empowered Plus Long Range |
19,94,000 |
6 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்டான கார்கள்..!
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |