2023-ல் புதிதாக வந்திருக்கும் Toyota Innova Hycross கார் பற்றிய தகவல்..!

Toyota Innova Hycross Information in Tamil

Toyota Innova Hycross Information in Tamil

நாம் அனைவருக்கும் உள்ள சில முக்கியமான ஆசை அல்லது கனவு என்றால் கார் வாங்குவது தான். அப்படி கார் வாங்க வேண்டும் ஆசை உள்ளவர்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு கார் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் Toyota Innova Hycross கார் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த காரின் வடிவமைப்பு, சிறப்பம்சம் மற்றும் இதன் தொழில்நுட்பம் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=>2023 ஆம் ஆண்டு வரப்போகும் இந்த Citroen Ec3 கார் பற்றி தகவல் உங்களுக்கு தெரியுமா..?

Toyota Innova Hycross Information in Tamil:

Toyota innova hycross review in tamil

இந்தோனேசியாவில் புதிதாக அறிமுகபடுத்தப்பட்ட Innova Genix என்னும் புதிய காரை இந்தியாவில் Innova Hycross எனும் பெயரில் Toyota நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இரண்டு கார்களும் ஒரே வடிவமைப்பை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க தகவல் ஆகும். இந்த Innova Hycross டொயோட்டாவின் TNGA-C: GA-C இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது, இது Crysta மாடலில் இருந்து வேறுபட்டது ஆகும்.

Toyota Innova Hycross காரின் சிறப்பம்சங்கள்:

இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆப்ஷனல் 2.0 லிட்டர் Hybrid மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 152 குதிரைகளின் சக்தி மற்றும் 187Nm இழுவிசையையும் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படித்துப்பாருங்கள்=> 2023 வரவிருக்கும் கார் பட்டியல்..! | Upcoming Cars in India 2023 in Tamil

இதில் Adaptive Cruise Control, ABS, EBD, Rear Parking Camera, Lane Keep Assist, Seven Airbags, 3 Point Seat Belts போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் இதில் எலெக்ட்ரிக் டெயில்கேட் மற்றும் வாய்ஸ் கமாண்ட் மூலம் திறக்கும் வசதி கொண்டுள்ளது.

6 மற்றும் 7 பேர் அமரும் வகையில், இரண்டு வகைகளில் இந்த கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் சுலபமாக 100 கி.மீ வேகத்திற்கு மேல் ஓட்டி செல்ல முடியும்.

Toyota Innova Hycross காரின் தொழில்நுட்ப வசதிகள்:

Toyota innova hycross review tamil

இதில் மின்சார பார்க்கிங் பிரேக், Hill-Hold Button, Panoramic Sunroof, Roof-Mounted AC Vents, Wireless Charging மற்றும் Ambient Lighting போன்ற தொழில்நுட்ப வசதிகள் உள்ளது.

ஹைக்ராஸ் டாப் எண்ட் மாடல்களில் 10 இன்ச் அளவில் இரண்டாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த புதிய Innova Hycross மாடல் டொயோட்டா கார்கள் Safety Sense 3.0 தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது.

இதையும் படித்துப்பாருங்கள்=> 2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்..!

காரின் விலை விவரம்: 

இந்த Innova Hycross கார் கியா நிறுவனத்தின் காரென்ஸ் மற்றும் மஹிந்திராவின் Marazzo மாடல் கார்களுக்கு உள்நாட்டு சந்தையில் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இதன் விலை தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com