Toyota VS Hyundai
இன்றைய பதிவில் Toyota மற்றும் Hyundai இரண்டு கார்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கிறது. பொதுவாக கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த காரை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி காரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் Toyota மற்றும் Hyundai இரண்டில் எது சிறந்தது என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Toyota VS Hyundai in Tamil:
ஹூண்டாய் மற்றும் டொயோட்டா இரண்டுமே Automobile துறையில் பிரபலமான பிராண்டு கார்கள் ஆகும். Automobile துறை பல புதுமையான வாகன மாடல்களை வழங்குகின்றன. அதில் இந்த கார்களும் ஓன்று.
ஹூண்டாய் (Hyundai) அதன் வாகன செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் சிக்கனம் இவற்றை டொயோட்டா மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹூண்டாய் சிறந்த பிராண்டாக இருக்கிறது. ஹூண்டாய் வாகனங்களில் V6, V8 மற்றும் 4 சிலிண்டர் இன்ஜின் விருப்பங்களை வழங்குகிறது.
அதேபோல, டொயோட்டா (Toyota) அதன் பெரிய வாகன மாடல்களில் V8 இன்ஜின்களை மட்டுமே வழங்குகிறது. டொயோட்டா உடன் ஒப்பிடுகையில் ஹூண்டாய் பயணிகளுக்கு அதிக இடவசதியை வழங்குகிறது.
அதுமட்டுமில்லாமல், அதிகபட்ச சரக்கு கொள்ளளவு கிட்டத்தட்ட 10 கன அடி கூடுதலாக உள்ளது. ஹூண்டாய் 43 MPG வரை வழங்குகிறது. டொயோட்டா 40 MPG மட்டுமே வழங்குகிறது. மேலும், டொயோட்டாவை விட ஹூண்டாய் மாடல்கள் தான் முதலிடத்தை பெறுகின்றன.
மேலும், ஹூண்டாய் தனது வாகனங்களுக்கு நம்ப முடியாத 5 ஆண்டுகள் உத்திரவாதத்தை வழங்குகிறது. அதுவே டொயோட்டா தனது வாகனங்களுக்கு 3 வருட உத்தரவாதத்தை மட்டுமே வழங்குகிறது.
Used கார் வாங்குகிறீர்கள் என்றால் இதை கவனித்து வாங்குங்கள்..! |
Toyota VS Hyundai:
Brand | Hyundai | Toyota |
New Vehicle Limited Warranty | 5 ஆண்டுகள் – 60,000 மைல்கள் | 3 ஆண்டுகள் – 36,000 மைல்கள் |
Anti-Perforation Warranty | 7 ஆண்டுகள் – வரம்பற்ற மைல்கள் | 5 ஆண்டுகள் – வரம்பற்ற மைல்கள் |
Powertrain Limited Warranty | 10 ஆண்டுகள் – 100,000 மைல்கள் | 7 ஆண்டுகள் – 100,000 மைல்கள் |
Roadside Assistance Warranty | 5 ஆண்டுகள் – வரம்பற்ற மைல்கள் | — |
அதுபோல டொயோட்டாவை விட ஹூண்டாய் கார்கள் பல பாதுகாப்பு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் டொயோட்டா மற்றும் ஹூண்டாய் இரண்டுமே பல வகையான தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள் ⇒ கார் ஓட்டும் போது எச்சரிக்கை செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடுகள் என்ன சொல்கிறது..?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |