இந்தியாவில் உள்ள மின்சார வாகனங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

Advertisement

 

நமக்கு இருக்கும் கனவுகளில் ஒன்று கார். அப்படி நாம் விரும்பும் கார், சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாமல் எளிமையான முறையில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். இப்போது சந்தையில் பல வகையான கார்கள் இருந்தாலும் அவற்றின் விலை மற்றும் என்ஜின் பயன்பாடு நமக்கு ஒரு வித தயக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டும்மல்லாமல் வாகனத்தின் வேகம், மேற்பரப்பின் தன்மை, பயன்படுத்தப்படும் உலோகத்தின் தன்மை இப்படி பல சந்தேகங்கள் இருக்கும். இவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது என்ஜின் செயல்பாடு. டீசல் என்ஜின் சிறந்ததா அல்லது பெட்ரோல் என்ஜின் சிறந்ததா என்று பல குழப்பங்கள் இருக்கும்.

ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு சிறந்தது மின்சார வாகனங்கள் இவை சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானதாக இருப்பதால் இவற்றின் பயன்பாடு வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிக சந்தை வாய்ப்பு உள்ள மின்சார வாகனத்தில் என்ன என்ன வகையான வாகனங்கள் உள்ளன. அவற்றின் பயன்பாடு எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்….

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

மின்சார வாகனங்களின் வகைகள்:

இன்றைய இந்திய சந்தையில் 4 வகையான மின்சார வாகனங்கள் உள்ளது.

How many types of e-vehicles in tamil:

1.Battery Electric Vehicle

2. Hybrid Electric Vehicle

3. Plug-in Hybrid Electric Vehicle

4. Fuel Cell Electric Vehicle

Summary of electric vehicles:

  1. பேட்டரி மின்சார வாகனங்கள் (BEVs):

Battery Electric Vehicle in tamil
 

பேட்டரி மின்சார வாகனங்கள் ( Battery Electric Vehicle ), ஆல்-எலக்ட்ரிக் வாகனங்கள் (AEV) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தில் இயங்கும் வாகனங்கள் முற்றிலும் பேட்டரியால் மட்டும் இயங்கும் electric drivetrain-னில் இயங்குகின்றது.

Electric Vehicle (EV)-யை இயங்குவதற்கான மின்சாரம் ஒரு பெரிய battery pack-கில்  சேமிக்கப்படுகிறது.

இதனை electricity grid மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம். சார்ஜ் செய்யப்பட்ட battery pack-கை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின் மோட்டார்களுக்கு வழங்குவதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட மின்சார காரை இயக்க சக்தியை அளிக்கிறது.

2. ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனம் (HEV):

Hybrid Electric Vehicle details in tamil

Hybrid Electric Vehicle-கள் Engine மற்றும் electric motor என இரண்டு அம்சங்களை கொண்டது. இந்த வகை வாகனங்களில் Engine எரிபொருளை கொண்டும் electric motor மின்சாரத்தை கொண்டும் இயங்கும் திறன் உடையது. இவை இரண்டும் வாகனத்தில் ஒரே நேரத்தில் இயங்க கூடியது.

3. பிளக்-இன் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனம் (PHEV):

Plug-in Hybrid Electric Vehicle

Plug-in Hybrid Electric Vehicle-கள் Engine மற்றும் electric motor என இரண்டு அம்சங்களிலும் இயங்கும். Engine நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டும். அல்லது bio-diesel எரிபொருளை கொண்டும் இயங்கும். மற்றும் electric motor ரீசார்ஜ் செய்யக்கூடிய battery pack மூலமாகவும் இந்த electric car -ரை இயக்க முடியும். electric motor-கான ரீசார்ஜ் வெளிப்புறமாக சார்ஜ் செய்ய கூடியது.

4. எரிபொருள் செல் மின்சார வாகனம்(FCEV):

Fuel Cell Electric Vehicle in tamil

Fuel Cell Electric Vehicle-கள் ஜீரோ-எமிஷன் அதவாது சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத வாகனம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த electric car இயக்கத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ‘fuel cell technology’ என்னும் முறை பயன்படுத்தப்படுகிறது.

இந்த முறையில் எரிபொருளில் உள்ள இரசாயன ஆற்றல் நேரடியாக மின்சார ஆற்றலாக மாற்றப்பட்டு பயன்படுத்த படுகிறது.

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 

 

Advertisement