Upcoming New Cars
நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஆசை என்பது இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் கார் வாங்குவதும் ஒன்று. சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. அதுபோல நம் ஆசைகளை தூண்டு அளவிற்கு நம் இந்தியாவில் பல சிறப்பம்சங்கள் கொண்ட கார்கள் 2023 ஆண்டின் தொடங்கத்தில் அறிமுகம் செய்யபட்டன. அந்த கார்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 2023 வரவிருக்கும் கார் பட்டியல்
இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு 3 மாதங்கள் கூட ஆகாத நிலையில் நம் ஆசைகளை மேலும் அதிகரிக்கும் விதத்தில் புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அந்த கார்கள் பற்றி இந்த பதிவின் வாயிலாக தேர்ந்து கொள்ளலாம் வாங்க..!
புதிதாக அறிமுகம் செய்யப்படும் கார்களின் பட்டியல்:
Maruti Suzuki Fronx:
மாருதி நிறுவனம் ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே Fronx காரை அறிமுகப்படுத்தியது. இது பலோனோ காரின் சாயலில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் மே மாதம் அறிமுகம் செய்யப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
உலகில் மிகவும் விலை உயர்ந்த கார் பட்டியல்..! |
Hyundai Verna:
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை வெர்னா காரை இந்த மாதம் 21 ஆம் தேதி அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ளது. இந்த கார் Sensual Sportinase Drive Philosophy -யில் உருவாக்கப்பட்டுள்ளது. Global Electro காரின் பல டிசைன் மொழிகள் இந்த காரில் இருக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 160 பிஎஸ் பவருடன் பொருத்தப்பட்டுள்ளது.
Honda Mid-Size SUV:
ஹோண்டா நிறுவனம் புதிய Mid-Size SUV காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த கார் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்வதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரில் புதிய எலக்ட்ரானிக் ஆக்சிலேட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Maruti Suzuki – Jimny:
இந்த கார் தான் மக்களின் எதிர்பார்ப்புகளுடன் களம் இறங்கப்போகிறது என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த Maruti Suzuki – Jimny மே அல்லது ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்
Tata Punch CNG:
டாடா நிறுவனம் தனது பஞ்ச் சிஎன்ஜி காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் நவம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் Twin Cylinder Arrangement உடன் Boot Space குறையாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Creta Facelift:
ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா காரை முற்றிலுமாக மாற்றி டிசைன் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கம், பின்பக்கம், உட்புற கட்டமைப்புகள் என்று பல அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. மேலும் இந்த கார் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023 இல் மே மாதம் அறிமுகமாகும் Nissan X Trail காரின் சிறப்பம்சம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் |
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |