காரில் ஏசியை போட்டதும் இந்த பட்டனையும் ஆன் பண்ணனுமாம்..! இது உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

What is The Recirculation Button in a Car in Tamil

காரில் ஏறியதும் அனைவரும் முதலில் ஏசியை தான் போடுவோம். ஏசி இல்லாமல் காரில் பயணம் செய்வது கடினமான ஒன்று. அதிலும் வெயில் காலத்தில் ஏசி இல்லாமல் காரை இயக்கக்கூட முடியாது. எனவே காரில் உள்ள ஏசி பட்டன் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு பக்கத்தில் இருக்கும் பட்டன் பற்றி பெரும்பாலானோருக்கு தெரியாது. காரில் ஏசியை போட்டதும் அதற்கு பக்கத்தில் வளைந்த அம்புக்குறியுடன் இருக்கும் பட்டனையும் போடுவது நல்லது. ஓகே வாருங்கள் காரில் ஏசி பட்டனுக்கு அருகில் வளைந்த அம்புக்குறியுடன் இருக்கும் பட்டன் எதற்காக இருக்கிறது.? அதனால் என்ன பயன் போன்றவற்றை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

What Does The Recirculation Button Do in a Car in Tamil:

 what does the recirculation button do in tamil

ஏசி பட்டனிற்கு அருகில் வளைந்த அம்புக்குறியுடன் இருக்கும் பட்டன் ( Air Recirculation Button) காற்று மறுசுழற்சி பட்டன் ஆகும். காற்று மறுசுழற்சி என்பது காரில் உள்ள ஒரு சிறப்பு அம்சமாகும். காரில் ஏசி போட்டதும் காற்று மறுசுழற்சி பட்டனை அழுத்துவதன் மூலம் காரில் காற்று மறுசுழற்சி அமைப்பு செயல்பட தொடங்கிவிடும். இது காருக்கு வெளியில் இருக்கும் சூடான காற்றை இழுத்து குளிர்விக்கிறது.

பொதுவாக வெயில் காலத்தில் காரின் ஏசியானது வெளியில் இருக்கும் சூடான காற்றை இழுத்து குளிர்விக்க சிரமப்படும். அந்நேரத்தில் ஏசி ஆனது காரை குளிர்விக்க நீண்ட நேரம் எடுக்கும்.

 when to use the recirculation button in tamil

அதுமட்டுமில்லாமல், காரில் காற்று மறுசுழற்சி பட்டன் On-ல் இருந்தால் வெளிப்புற காற்றை ஏசி பயன்படுத்தாது. காரில் இருக்கும் காற்றையே  மீண்டும் பயன்படுத்துகிறது.

இந்த காற்று மறுசுழற்சி பட்டன் கோடைகாலத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. கார் நன்றாக குளிர்ந்தவுடன் காற்று மறுசுழற்சி பட்டனை ஆஃப் செய்து விட்டு ஏசியை மட்டும் இயக்கலாம்.

எனவே, நீங்கள் வெயில் காலத்தில் காரில் கூடுதல் குளிர்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றால் காற்று மறுசுழற்சி பட்டன் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல் 

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 
Advertisement