Post Office SSY Scheme Open Eligibility
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் பயனுள்ள பதிவாக தான் இருக்கும். பெரும்பாலும் நாம் அனைவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் நாம் பணத்தை சேமித்து வைத்தால் நாளடைவில் நாம் சேமித்த பணம் மட்டுமே இருக்கும்.
ஆனால் அதை போஸ்ட் ஆபிஸ், LIC மற்றும் வங்கி போன்ற ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேமிப்பு திட்டத்தை தொடங்கினால் பல மடங்கு லாபம் கிடைக்கும். அதனால் தான் இன்று பலரும் போஸ்ட் ஆபிஸில் இருக்கும் திட்டங்களில் கணக்கு தொடங்குகிறார்கள். அந்த வகையில் இன்று போஸ்ட் ஆபிஸில் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்க என்ன தகுதி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
போஸ்ட் ஆபிஸில் RD சேமிப்பு திட்டத்தை தொடங்க இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா |
செல்வமகள் சேமிப்பு திட்டம் தகுதி அளவுகோல்கள்:
செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) என்றும் சொல்வார்கள். இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட்டது. இப்பொழுது இந்த திட்டத்தை தொடங்குவதற்கான தகுதி அளவுகோல்களை காண்போம்.
- ஒரு பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மட்டுமே இந்த செல்வமகள் சேமிப்பு கணக்கைத் திறக்க முடியும்.
- செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கும் போது பெண் குழந்தை 10 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
- அதுபோல ஒரு குடும்பத்திற்கு இரண்டு SSY கணக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
- மேலும் ஒரு குடும்பத்தில் 3 பெண் குழந்தைகள் இருந்தால் சில சந்தர்ப்பங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு இந்த கணக்கை தொடங்கலாம்.
செல்வமகள் திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்:
- பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
- விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் புகைப்பட ஐடி.
- விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் முகவரிச் சான்று மற்றும் PAN, Voter ID போன்ற பிற KYC சான்றுகள் இருக்க வேண்டும்.
போஸ்ட் ஆபிஸில் PPF சேமிப்பு திட்டத்தை தொடங்க இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா |
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |