SBI Bank Car Loan Eligibility in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் தனது சொந்த சம்பாத்தியத்தில் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது தான். ஆனால் அதற்கு அதிக அளவும் பணம் தேவைப்படும் என்பதால் பலரும் இந்த ஆசையை மறந்து விடுகிறார்கள். ஆனால் நமக்கு உதவும் வகையில் தான் வங்கிகள் வாகன கடனை அளிக்கின்றன.
அதனால் அதனை பெற்று உங்களின் ஆசையினை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். ஆனால் அப்படி வாகன கடன் பெற வேண்டும் என்றால் சில தகுதிகள் வேண்டும். இந்த தகுதிகள் வங்கிகளுக்கு மாறுபடும். அதனால் தான் இன்றைய பதிவில் SBI வங்கியில் வாகன கடன் இருப்பவர்களுக்கான தகுதி அளவுகோல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன தகுதிகள் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> SBI வங்கியில் புதிதாக Credit Card வாங்க போறிங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க
SBI Bank Car Loan Eligibility Criteria in Tamil:
- SBI வங்கியில் வாகன கடன் பெறுவதற்கு உங்களுக்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் தேவை.
- உங்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்ச வயது 65 வயது இருக்க வேண்டும்.
- உங்களின் ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் 2,50,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 4,00,000 ரூபாய் வரை இருக்க வேண்டும்.
SBI வங்கியில் வாகன கடன் பெறுவதற்கு தகுதியான வாடிக்கையாளர்கள்:
- சம்பளம் வாங்கும் ஊழியர்கள்
- தொழில் வல்லுநர்கள்
- வணிகர்கள்
- சுயதொழில் செய்யும் நபர்கள்
- விவசாயம் செய்யும் நபர்கள்
SBI வங்கியில் வாகன கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:
கடன் விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்,
- அடையாள சான்று
- முகவரி சான்று
- வருமானச் சான்று
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்தியன் வங்கியில் வாகன கடன் வாங்க போறிங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉👉👉 | Eligibility |