SBI வங்கியில் தனிநபர் கடன் பெறுவதற்கு இவ்வளவு தான் தகுதியா..?

Advertisement

Sbi Bank Personal Loan Eligibility in Tamil

வங்கிக்கு செல்வது என்றால் கொஞ்சம் அலுப்பாக இருக்கும். ஏனென்றால் அங்கு செல்வது என்றால் ஒரு நாள் தனியாக வேலைக்கு விடுமுறை எடுக்கவேண்டும். அதேபோல் ஒரு கணக்கு துவங்க வேண்டுமென்றால் அதற்கு என ஆவணம் தேவை எவ்வளவு பணம் கட்டவேண்டும் என நிறைய கேள்விகள் இருக்கும்..! இதற்கு தனியாக ஒரு ஒரு தடவை வங்கிக்கு சென்று அதன் பின்பு தான் அதற்கான ஆவணங்களை எடுத்து செல்வோம் அல்லவா..! ஆகவே நாம் சுலபமாக தெரிந்துகொள்ளும் வகையில் SBI வங்கியில் தனிநபர் கடன் பெறுவதற்கு என்ன தகுதிகள் தேவை என்று பார்க்கலாம் வாங்க..!

Sbi Bank Personal Loan Eligibility in Tamil:

SBI வங்கியில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தான் கடன் கொடுக்கப்படும்.

மாதம் சம்பளம் பெறுபவர்களுக்கான தகுதிகள்:

மாத வருமானம் Rs.5,000
இடம் இந்தியாவில்
யாருக்கு கடன் கொடுக்கப்படும் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள்
வட்டி விகிதம் 11.95% – 12.45% 
கடன் தொகை Rs.25,000 முதல் 24 மடங்கு NMI
கடன் செலுத்தும் காலம் 72 மாதங்கள் வரை
செயலாக்க கட்டணம் கடன் தொகையில் 1% + ஜிஎஸ்டி

 

SBI ஓய்வூதிய கடன் தகுதிகள்:

வயது 76 வயதுக்குள் இருக்கவேண்டும்.
குறைந்தபட்ச மாத வருமானம் Rs.50,000
வட்டி விகிதம் 11.90% – 12.40% 
இடம் இந்தியா
ஓய்வூதியதாரர் வகை சாதாரண ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்
கடன் தொகை Rs.25,000 முதல்
கடன் செலுத்தும் காலம் 24 மாதங்கள் – 84 மாதங்கள்
செயலாக்க கட்டணம் கடன் தொகையில் 0 – 0.5% + ஜிஎஸ்டி

 

SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை

SBI தனிநபர் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:

அடையாளச் சான்று:

  • ஆதார் அட்டை,
  • பான் கார்டு,
  • வாக்காளர் அடையாள அட்டை,
  • ஓட்டுநர் உரிமம் ,
  • பாஸ்போர்ட்

இருப்பிடச் சான்று:

  • சொத்து வரி ரசீது,
  • மின் கட்டணம் அல்லது
  • டெலிபோன் பில் நகல்,
  • பாஸ்போர்ட்,
  • வாக்காளர் அடையாள அட்டை

வருமானச் சான்று:

நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் நகல், சம்பளம் வரவு வைக்கப்பட்ட கணக்கின் முந்தைய ஆறு மாதங்களுக்கான வங்கி அறிக்கை, வருமான வரி அறிக்கை (ஐடிஆர்), முந்தைய ஆறு மாதங்களுக்கான சம்பள சீட்டு அல்லது வங்கி அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளின் ஐடிஆர் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் கணக்கு அறிக்கைகள்.

SBI வங்கியில் Account திறக்க என்ன தகுதி வேண்டும் தெரியுமா

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉👉👉 Eligibility
Advertisement