SBI வங்கியில் புதிதாக Credit Card வாங்க போறிங்களா..? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

SBI Credit Card Eligibility in Tamil

இன்றைய காலகட்டத்தில் Credit Card பற்றி தெரியாத ஆளே இருக்க மாட்டார்கள். கிரெடிட் கார்டு என்பது பல தரப்பு மக்களிடம் முக்கிய நிதி ஆதாரமாகவே மாறிவிட்டது. அனைத்து வங்கிகளும் போட்டி போட்டுகொண்டு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அப்படி வழங்கப்படும் கிரெடிட் கார்டை யாருவேண்டுமென்றாலும் வாங்கி கொள்ள முடியாது.

ஆம் நண்பர்களே கிரெடிட் கார்டை பெற வேண்டுமென்றால் பல தகுதிகள் உள்ளது. இந்த தகுதிகள் வங்கிகளுக்கு மாறுபடும். அதனால் தான் இன்றைய பதிவில் SBI வங்கியில் Credit Card வாங்க இருப்பவர்களுக்கான தகுதி அளவுகோல்களை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து SBI வங்கியில் Credit Card பெறுவதற்கு தேவையான தகுதியை அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> SBI வங்கியின் கிரெடிட் கார்டு வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா

SBI Credit Card Eligibility Criteria in Tamil:

SBI Credit Card Eligibility Criteria in Tamil

SBI வங்கி தனது வடிக்கையாளர்களுக்காக பல வகையான கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அப்படி வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளுக்கு சில தகுதிகள் உள்ளது அதனை பற்றி இங்கு அறிந்து கொள்ளவும்.

  1. Credit Card பெறும் விண்ணப்பதாரரின் வயது 21 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும்.
  2. Add – On கார்டு பெறும் விண்ணப்பதாரரின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
  3. சம்பளம் பெற்றவராகவோ, சுயதொழில் செய்பவராகவோ, மாணவர்களாகவோ அல்லது ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரராகவோ இருக்க வேண்டும்.
  4. விண்ணப்பதாரர் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் வரை நிலையான வருமானம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் பெறும் நபர்களுக்கான தகுதி:

  1. விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
    21 முதல் 70 வயது வரை இருக்க வேண்டும்.
  2. தனிநபரின் CIBIL மதிப்பெண் 750-க்கு மேல் இருக்க வேண்டும்.
  3. உங்களிடம் வழக்கமான வருமான ஆதாரம் இருக்க வேண்டும்.
  4. இது தவிர, உங்கள் SBI கிரெடிட் கார்டுக்கு தேவையான ஆவணங்களான சம்பளச் சீட்டுகள் மற்றும் கடந்த 3 மாதங்களுக்கான வங்கி அறிக்கைகள், அடையாளச் சான்று, வயது மற்றும் முகவரி ஆகியவற்றையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்தியன் வங்கியில் கிரெடிட் கார்டு பெறுவதற்கான தகுதிகள் இது தானா

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉👉👉 Eligibility
Advertisement