அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கணும் பாடல் வரிகள்

Advertisement

Appa Unga Madiyila Song Lyrics in Tamil

பொதுவாக பாடல் கேட்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். பாடல் கேட்பது மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது. இதனால் அடிக்கடி பாடல்களை கேட்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பாடல்களை கேட்பார்கள். சில பேர் மெலடி பாடல் கேட்பார்கள், சில பேர் குத்து பாடல் கேட்பார்கள். சில பேர் அர்த்தமுள்ள பாடல்கள் கேட்பார்கள், செண்டிமெண்ட் பாடல்களை கேட்பார்கள். எந்த பாடல் கேட்டாலும் அதனின் பாடல் வரிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் அப்பா உங்க மடியில பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம்.

அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கணும் பாடல் வரிகள்:1

அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும் – 2

என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2
– அப்பா உங்க

என் உசுருக்குள்ள கலந்து
உயிர்வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ – 2
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ – என் – 2
– அப்பா உங்க

உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ – 2
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ – என்ன – 2
– அப்பா உங்க

பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல – 2
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு – நான் – 2
– அப்பா உங்க

ரயிலின் ஒலிகள் பாடல் வரிகள்

அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கணும் பாடல் வரிகள்:2

அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்
அப்பா உங்க பாதத்தில விழுந்து கிடக்கணும்

உங்க கிருபை தாங்கப்பா
உங்க இரக்கம் தாங்கப்பா
உங்க தயவு தாங்கப்பா
உங்க பெலனை தாங்கப்பா

அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்
அப்பா உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும்

உறவு நேசமெல்லாம்
என்னை வெறுத்து தள்ளுது
உங்க பாசமோ என்னை கட்டி இழுக்குது

உம்மைப்போல் நேசிக்க உலகில் யாரும் இல்லையே
உம்மைப்போல் தேற்றிட எனக்கு யாரும் இல்லையே
– அப்பா உங்க

யாரும் இல்லை என்று அனாதையாய் வாழ்ந்த என்னை உமது பிள்ளையாக
பெயர் சொல்லி அழைத்தீரே

உம்மைவிட்டால் உலகில் எனக்கு யாருமே இல்லையப்பா
உம்மைவிட்டால் உலகில் எனக்கு வாழ்வே இல்லைப்பபா
அப்பா உங்க

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement