தமிழில் சிறந்த இசையமைப்பாளர் பட்டியல்…! | Tamil Best Music Directors List in Tamil

Advertisement

Music Directors in Tamil 2022 in Tamil 

அனைவருக்கும் படம் பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும் ஆனால் சிலருக்கு பாடல் கேட்பது பிடிக்கும். ஒரு சில படங்களை பாடல் கேட்பதற்காகவும் பார்ப்பார்கள். இன்னும் சில படங்கள் பார்ப்பதற்கு சுமாராக இருந்தாலும் அதனை பார்க்க வைக்க ஆர்வத்தை தூண்டுவது படலாகத்தான் இருக்கும்.

பாடல் எப்போது காதல் முதல் பயம் வரை வித விதமான பாடல்களை வெளியாகி உள்ளது. ஒரு பேய் படமாக இருந்தாலும் சரி அதனை அவ்வளவு அழகான பாடலை தமிழ் சினிமாவில் பார்க்க முடியும். தமிழ் சினிமா மட்டும் நாம் குறிப்பிட்டு சொலல் முடியாது பாடல் என்றாலே மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் பாடல் உள்ளது அது அனைத்தையும் அனைத்து மக்களும் ரசித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று தமிழ் மொழியில் அனைத்து மக்களும் ரசித்த பிரபலமான  இசையமைப்பாளர்கள் பட்டியலை இந்த பதிவில் வாயிலாக பார்ப்போம்.

Best Music Director in Tamil:

A.R Rahman:

a.r rahman

இவர் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவருடைய முதல் படம் ரோஜா ஆகும். இந்த படத்தில் இயக்குனர் மணிரத்தினம் ஆகும். இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் இசையமையாளராக பணியாற்றி வருகிறார். இவரை இசை புயல் எ ஆர். ரகுமான் என்று அழைக்கப்படுகிறார். இவர் இசைக்காக நிறைய விருதுகளை பெற்றுள்ளார் அதில் தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமையை பெற்று தந்துள்ளார்.

இளையராஜா:

இளையராஜா

இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் இவரும் ஒருவர். இவர் முதல் படம் அன்னக்கிளி ஆகும். இந்த படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் இசையமையாளராக தடம் பதித்தார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசையமைப்புக்காக நிறைய விருதுகளை பெற்றுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா:

யுவன் சங்கர் ராஜா

பிரபலமான இசையமைப்பாளர்களின் இவரும் ஒருவர். இவர் இளையராஜாவின் மகன் ஆவார். இவருடைய முதல் படம் 1997ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் தன் 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவருடைய விடா முயற்சி அவரை வெற்றி பாதையில் தள்ளி சென்றது. தற்போது அவருடைய பாடல்கள் கேட்காத இடங்கள் இல்லை, அவருக்கென்று தனித்துவமான அடையாளத்தை நிர்ணயித்து கொண்டார்.

ஹாரிஸ் ஜெயராஜ்:

ஹாரிஸ் ஜெயராஜ்

தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். இவருடைய முதல் படம் மின்னலே ஆகும். இதனை தொடர்ந்து அவருடைய பாடல் அனைத்தும் மிகவும் தனித்துவமாக இருக்கும்.

ஜி வி பிரகாஷ் குமார்:

ஜி வி பிரகாஷ்

இவர் இசையமைப்பாளர், நடிகர் என பல முகங்களை தமிழ் சினிமாவில் தடம் பதித்துள்ளார். இவர் இசை குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார் எ ஆர் ரகுமான் அவர்களின் சகோதரியின் மகன் ஆவார். சிறுவயதில் இசையில் மீது பற்றுக்கொண்டு இசையில் படிப்பை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் பின்னனியில் பாடல் பாடியுள்ளார் அதன் பின் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். இவருக்கு முதல் படம் 2006-ம் ஆண்டு வெளிவந்த வெயில் திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். அதனை தொடர்ந்து வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார்.

அனிருத்:

அனிருத்

இந்திய திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பாடகராகவும், வெள்ளித்திரையில் சில கௌரவ தோற்றங்களில் தோன்றி நடித்து வருகிறார். அவரது 21-ம் வயதில் ‘3’ படத்திற்கு இசையமைக்க ஆரம்பித்தார். அந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா எத்தனை படங்கள் நடித்துள்ளார் தெரியுமா?

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 

 

Advertisement