சிறந்த பத்து நகைச்சுவை நடிகர்கள் யார் தெரியுமா.?

Advertisement

நகைச்சுவை நடிகர்

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களின் பெயர்கள்  மற்றும் அவர்களை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் பற்றியும் தான் தெரிந்துகொள்ளப்போகின்றோம். பொதுவாக நாம் படம் பார்க்கும் பொழுது நகைசுவைகள் இருந்தால் தான் அந்த படத்தையே விரும்புவோம். அந்தவகையில் படங்களில் நடிப்பது என்பது மிகவும் சுலபம் ஆனால்  நகைச்சுவை நடிகராக மாறுவது மிகவும் கடினமான ஒன்றாகும்.  நகைச்சுவையை பொறுத்தவரை அதற்கான முகபாவனைகள் தேவை. அந்தவகையில் தமிழ் சினிமாவில் சிறந்து விளங்கி கொண்டிருக்கும் பத்து நகைச்சுவை நடிகர்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

வெற்றி இயக்குனர்களின் ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் இந்த படங்கள்

1. நகைச்சுவை நடிகர் வடிவேலு:

நகைச்சுவை நடிகர் வடிவேலு

வடிவேல் அவர்களின் முழு பெயர் குமார வடிவேல் ஆகும். இவருடைய  முதல் படத்தை தொடங்கிய ஆண்டு 1988 ஆம் ஆண்டு ராஜேந்தர் இயக்கிய தங்கை கல்யாணி என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க தொடங்கினார். மேலும் இவர் தவசி, போக்கிரி போன்ற திரைப்படங்களில் மிகவும் பாராட்டுகளையும் பெற்று வந்தார். அதோடுமட்டுமின்றி புலிகேசி, இந்திர லோகத்தில் நா அழகப்பன் போன்ற படங்களிலும் பிரபலமானார்.

2. நடிகர் சார்லி:

நடிகர் சார்லி

சார்லி என்ற நகைச்சுவை நடிகரின் உண்மையான பெயர் டாக்டர் வேல்முருகன் தங்கசாமி மனோகர் ஆகும். சார்லி என்ற பெயர் இவருக்கு மிகப்பெரிய நகைச்சுவை நடிகனாக சார்லி சாப்ளின் இடமிருந்து பெறப்பட்டது.  இவர் முதல் முதலில் 1982 -யில் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் நடித்த படங்கள் 800 -க்கும் மேற்பட்ட படங்கலில்  நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவிலும், பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்ற நடிகர் ஆவர்.

3. நகைச்சுவை நடிகர் செந்தில்:

நகைச்சுவை நடிகர் செந்தில்

செந்தில் அவர்கள் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், அரசியல் வாதியாகவும் இருந்திருக்கிறார்.  இவரும் நகைச்சுவை  நடிகரான கவுண்டமணியும் சேர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகர்களாக நடித்து உள்ளார்கள்.  இவர் முதல் முதலில் 1980 ஆம் ஆண்டு இதிக்கர  பக்கி படத்தில் இருந்து  தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.

4. நடிகர் மனோபாலா:

நடிகர் மனோபாலா

மனோபாலா அவர்கள் 1953 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல்,  ஒரு  சிறந்த இயக்குனராகவும், தயாரிப்பாளராகுவும் இருந்திருக்கிறார். இவர் தனது நடிப்பு வாழ்க்கையை 1979 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். இவர் முதல் படமான வரப்புகளில் பஞ்சாயத்து தலைவராகவும் நடித்துள்ளார்.  மேலும் இவர் பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

5. நகைச்சுவை நடிகர் சந்தானம்:

நகைச்சுவை நடிகர் சந்தானம்

சந்தானம் அவர்கள் முதல் முதலில் நடிப்பு வாழ்க்கையை 2004 ஆம் ஆண்டு மன்மதன் திரைப்படத்தில் இருந்து தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு பல படங்களிலும் நடித்து புகழ் பெற்று விளங்கினார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டில் இருந்து தனக்கு சொந்த தயாரிப்பில் ஆன திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

6. நகைச்சுவை நடிகர் பாண்டியராஜன்:

நகைச்சுவை நடிகர் பாண்டியராஜன்

இவர் 1959 ஆம் ஆண்டு சென்னை துரைப்பாக்கத்தில்  பிறந்தார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 1981 ஆம் ஆண்டு தொடங்கினார். மேலும் சமீபத்தில்  ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த  திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். பிறகு இவர் 1986 ஆம் ஆண்டு வாசுகியை திருமணம் செய்துகொண்டார், இவருக்கும் மூன்று ஆண் குழந்தைகள் இருக்கின்றன.

7. நடிகர் சூரி:

நடிகர் சூரி

நடிகர் சூரி அவர்கள் 1997 ஆம் ஆண்டு காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தில் இருந்து தனது நடிப்பை தொடங்கினார். இவர் வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தில் நடித்த பொழுது  நடித்ததிலுருந்து  அதில் இருந்து இவர் பரோட்டோ சூரி என்றும் அழைக்கப்பட்டார்.  மேலும் இவர் பல படங்களில் இன்றும் நடித்து கொண்டுதான் இருக்கிறார். இவருடைய சொந்த ஊர் மதுரை ஆகும்.

8. நகைச்சுவை நடிகர் கவுண்டமணி:

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்களின் முழு பெயர் சுப்பிரமணியம் கருப்பையா ஆவார். இவர் தனது நடிப்பு வாழ்க்கையை 1964 ஆம் ஆண்டு சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் இருந்து தொடங்கினார். அந்த திரைப்படத்தில் ஒரு வேடிக்கையான ஓட்டுநராக நடித்துள்ளார். மேலும் இவர் 1963 -யில்  திருமணம் செய்துகொண்டார், இப்பொழுது இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன.

9. யோகி பாபு:

யோகி பாபு

நகைசுவை நடிகரான யோகிபாபு அவர்கள் பல திரைப்படங்களில் நடித்து இன்னும் பலரையும் சந்தோசபடுத்துகிறார். இவர் தனது நடிப்பு வாழ்க்கையை 2009 ஆம் ஆண்டு அமீர் நடித்த யோகி திரைப்படத்தில் தொடங்கினார்.  மேலும் இவர் ஆண்டவன் கட்டளை,  கோலமாவு கோகிலா போன்ற  படங்களில் இருந்து மிகவும் பிரபலமடைந்தார்.  மேலும் இவர் 2020 ஆம் ஆண்டு தான் திருமணம் செய்கொண்டார், இன்னும் பல படங்களில் நடித்து பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

10. நடிகர் ராஜேந்திரன்:

நடிகர் ராஜேந்திரன்

நடிகர் ராஜேந்திரன் அவர்கள் 500 -க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். இவர்  தனது நடிப்பு வாழ்க்கையை 2003 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நகைச்சுவை நடிகனாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 

 

Advertisement