நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்தப் படம் | Keerthi Suresh New Movie Name Tamil

Keerthi Suresh New Movie List Tamil

keerthi suresh new movie list tamil: நடிகை கீர்த்தி சுரேஷ் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். கீர்த்தி சுரேஷ் 1992-ஆம் ஆண்டு, அக்டோபர் 17 ஆம் தேதி சுரேஷ்குமார், மேனகா என்பவருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சரி இந்த பதிவில் நடிகை கீர்த்தி சுரேஷின் அடுத்த திரைப்படம் (keerthy suresh new movie list tamil) என்ன என்பதை படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..

சூர்யாவின் புதிய படம்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்த திரைப்படம் எது தெரியுமா?

 keerthi suresh new movie name tamil

கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அக்கா ரேவதி தயாரிப்பில் தற்போது நடித்து வரும் திரைப்படத்தின் பெயர் “வாஷி“.

இதைத்தான் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் New Beginning and New Journey என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல நடிகை மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷின் இளைய மகள்தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகை மேனகா மற்றும் சுரேஷின் மூத்த மகள் ரேவதி தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

தன்னுடைய அக்கா தயாரிப்பில் வாஷி திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

வாஷி திரைப்படத்தின் இயக்குநர்:

 keerthi suresh new movie list tamil

இந்த வாஷி திரைப்படத்தை இயக்குநர் விஷ்ணு ஜி ராகவ் இயக்கவிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் “மாரி 2“ படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டொவினோ தாமஸ் என்பவர் கீர்த்தி சுரேஷிற்கு ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com