வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி.. பாடல் வரிகள்..!

Updated On: September 27, 2023 12:57 PM
Follow Us:
Kodana Kodi Song Lyrics in Tamil
---Advertisement---
Advertisement

Kodana Kodi Song Lyrics in Tamil Language

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நாம் அனைவருக்குமே பாடல் கேட்கும் பழக்கம் இருக்கும். பாடல் கேட்டால் நம் மனம் அமைதி பெறுகிறது. இதற்காகவே பெரும்பாலானவர்கள் பாடல் கேட்பார்கள். முக்கியாக பேருந்தில் பயணிக்கும் போது ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து பாடல் கேட்பதை அதிகமாக விரும்புவார்கள். இருந்தாலும் அப்பாடலை நம்மால் முழுமையாக பாட முடியாது. அதில் உள்ள பாடல் வரிகள் நமக்கு தெரியாது. எனவே பாடல் வரிகளை நாம் நெட்டில் இருந்து தான் எடுப்போம். அப்படி நீங்கள் கோடான கோடி பாடல் வரிகளை பாட விரும்புகிறீர்கள் என்றால், அதற்கான பாடல் வரிகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம்.

கோடான கோடி பாடல் வரிகள்:

பாடல் பற்றிய குறிப்புகள்:

பாடல் பெயர் : கோடான கோடி 

படத்தின் பெயர் : சரோஜா 

பாடகர்கள் : காஜல் அகர்வால், சுவி,
ரனினா ரெட்டி, ராகுல் நம்பியார்,
முஹமத் அஸ்லாம், ஜெஸ்ஸி கிப்ட்

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. பாடல் வரிகள்..!

Kodana Kodi Song Lyrics in Tamil:

பெண்: கோடான கோடி
அதில் குளிப்போம் விளையாடி
ஆண்: குஷியாகும் வாடி
அட இதுபோல் வருமாடி

ஆண்: ஒய்யாரி
பெண்: ஏ அசந்தபடி
ஆண்: சிங்காரி
பெண்: நீ அழுத்திப்பிடி
ஆண்: கொடி ஏத்தி
பெண்: தூக்கிப்புடி
இனி ரூட்-அ கொஞ்சம் மாத்து

பெண்: கோடான கோடி
அதில் குளிப்போம் விளையாடி
ஆண்: குஷியாகும் வாடி
அட இதுபோல் வருமாடி

பெண்: குத்தாளத்து ஊதக்காத்து
கூத்தாடுது நேரம் பாத்து
இப்போது சுதி ஏறுது தன்னால

ஆண்: அம்மாடி உன் ஆட்டம் பார்த்து
நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்ப வழி மாறுது உன்னால

ஆண்: ஏதோ தோனுது எதுவோ ஆகுது
உன்னப்பார்த்ததால
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது
உன்ன சேர்ந்ததால

பெண்: விடாது இந்த மோகம் வேகம்
தொடாம தொட்டு சேரும்
தடால் தடால்னு அடிக்டிக்கிற மனசு
கபால்னு மேல பாயும்

பெண்: வாராதது வந்தாச்சுடா
கொண்டாடலாம்
இனி நம்ம நேரம் தானே

பெண்: துட்டால நீ கட்டிப் போடு
தூங்காம கானா பாடு
விட்டா இது விதவித விளையாட்டு

பெண்: எப்போதுமே யோகம் தாண்டா
இதுக்கு ஒரு யோசனை ஏண்டா
இப்போ சுகம் தொட்டா விடுமாடா

ஆண்: காலம் மாறுது கணக்கில் ஏறுது
இஷ்டம் போல வாழு
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது
இனிமே நல்ல நாளு

பெண்: பொன்னால மாலை எப்போதும்
போடு நம்மோட வாழ்வு டாப்பு
உண்டானதெல்லாம் கண்டாக வேணும்
விடாதே கொஞ்சம் கேப்பு

பெண்: எல்லாருக்கும் நல்லாருக்கும்
ஃபுல்லாலிருக்கும்
இனி நம்ம நேரம் தானே

பெண்: கோடான கோடி
அதில் குளிப்போம் விளையாடி
ஆண்: குஷியாகும் வாடி
அட இதுபோல் வருமாடி

பெண்: கோடான கோடி
அதில் குளிப்போம் விளையாடி
ஆண்: குஷியாகும் வாடி
அட இதுபோல் வருமாடி

ஆண்: ஒய்யாரி
பெண்: ஏ அசந்தபடி
ஆண்: சிங்காரி
பெண்: நீ அழுத்திப்பிடி
ஆண்: கொடி ஏத்தி
பெண்: தூக்கிப்புடி
இனி ரூட்-அ கொஞ்சம் மாத்து

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே… பாடல் வரிகள்..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now