பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் | Ponniyin Selvan Review in Tamil
ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. இந்த படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் கருத்து என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியாளம்.
ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த நடிகர் ஜெயம் ரவி!
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ள நடிகர் ஜெயம் ரவி சென்னை வெற்றி திரையரங்கில் திரைப்படம் பார்க்க சென்றார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
படத்தை சோழ தேசத்தில் பார்ப்பது மகிழ்ச்சி: நடிகர் பார்த்திபன்!
பொன்னியின் செல்வன் திரைப்படம் தஞ்சை சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து வருகிறார். முன்னதாக, ’படத்தை சோழ தேசத்தில் பார்ப்பது மகிழ்ச்சி’ என மகிழ்ச்சி தெரிவித்தார்.
ரசிகர்களோடு சேர்ந்து பார்த்தது பெரும் மகிழ்ச்சி: ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் முதல் காட்சியை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இரண்டு வருடங்களுக்கு பிறகு என்னுடைய படம் திரையில் வெளியாகியுள்ளது. ரசிகர்களோடு சேர்ந்து பார்த்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.
’படம் எப்படி இருக்கு..’ ரசிகர்களிடம் ரிவியூ கேட்ட நடிகர் விக்ரம்!
சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் விக்ரமிடனும் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ரசிகர்களிடம் படம் பார்த்தீர்களா, எப்படி இருந்தது என ரிவியூ கேட்டார். அதற்கு சூப்பராக இருப்பதாக அங்கிருந்தவர்கள் பதிலளித்தனர்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |