சிவகார்த்திகேயனின் அடுத்த படம் | Sivakarthikeyan Next Movie Name in Tamil
சிவகார்த்திகேயன் என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் தமிழ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மனதிலும் இடம் பிடித்தார். தன்னுடைய மிமிக்ரி செய்யும் திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பிப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார். சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்திற்கு அடுத்ததாக ஒரு ரசிகர்களை அசரவைக்கும் படி ஒரு திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். புதிதாக நடித்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்பட (siva karthikeyan next movie) பெயரினை வாங்க தெரிந்துக்கொள்ளலாம்.
சூர்யாவின் அடுத்த திரைப்படம் |
Sivakarthikeyan Next Movie Name in Tamil:
சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் “😎டான்😎“ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம்:
இதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் மீண்டும் இணைந்து படம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராகவும், பள்ளி மாணவராகவும் அவர் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் உள்ள பாடலிற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்தப் படம் |
டான் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?
டான் படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். எஸ்.ஜே சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக டைரக்டர் சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த எஸ்.ஜே சூர்யா, இந்தப் படத்தின் ஷூட்டிங் மிகவும் அழகாக இருந்ததாகவும் அதற்கு சிபி சக்ரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயனுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். மேலும் டான் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இதையடுத்து படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |