சூர்யாவின் வாழ்க்கை வரலாறு

Advertisement

நடிகர் சூர்யாவின் வாழ்க்கை வரலாறு

வணக்கம் பொதுநலம்.காமின் அன்பு நெஞ்சங்களே. இன்று நம் பொதுநலம் பதிவில் சுவாரசியமான மற்றும் இன்று நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு நபரை பற்றி தான் பார்க்கப்போகிறோம். யார் அந்த நபர் என்று தானே யோசிக்கிறீர்கள். வாங்க நண்பர்களே யார் அந்த நபர் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம். இன்று நாம் சூர்யாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தான் பார்க்கப்போகிறோம். திரையுலகில் சூர்யா என்று சொன்னாலே எல்லோர்க்கும் நினைவில் வருபவர். திரையுலகில் மிகவும் பிரபலமானவர். பல திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளவர். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை பற்றித்தான் நம் பொதுநலம்.காம் பதிவில் பார்க்கப்போகிறோம்.

சூர்யாவின் பிறப்பு மற்றும் குடும்பம்:

surya actor

இவர் தமிழ் திரையுலகின் 1965-ல் அறிமுகமாகி 1970 முதல் 1980-களில் முன்னணி நடிகராக வளம் வந்த நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் ஆவார். சூர்யா அவர்கள் தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நடிகர் சிவகுமாருக்கும் லட்சுமிக்கும் மூத்த மகனாக ஜூலை மாதம் 23 ஆம் தேதி, 1975 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சரவணன். இவர் தற்போது சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வாழ்ந்து வருகிறார்.

நடிகர் விஜய் வரலாறு

 

சூர்யா தன்னுடைய பள்ளி படிப்பை சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியிலும், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலை பள்ளியிலும் கற்றார். தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்து வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்றார்.

இவருக்கு பிருந்தா என்ற சகோதரியும் கார்த்திக் என்ற சகோதரரும் உள்ளனர். கார்த்திக் தமிழ் திரையுலகில் உதவி இயக்குனராக அறிமுகமாகி, தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.

2006 ஆம் ஆண்டு ஜோதிகாவை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.

சூர்யாவின் ஆரம்பகால வாழ்க்கை: 

திரையுலக முன்னனுபவம் எதுவும் இல்லாமல் தமிழ்  திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து தேவைகளையும் குறுகிய காலகட்டங்களிலே வளர்த்துகொண்டு இன்று சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா அவர்கள்.

நடிகர் என்ற பெருமையோ, திமிரோ சிறிதளவும் இல்லாமல் வாழ்ந்த சிவகுமார் அவர்கள், தனது பிள்ளைகளையும் அவ்வாறே வளர்த்து உள்ளார் என்பதற்கு சூர்யா அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார். வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்ற சூர்யா அவர்கள், ஆடை தயாரிப்புத் தொழில்துறை மீது அதிக ஆர்வமுடையவராக இருந்ததால், ஒரு முன்னணி நடிகரின் மகனென்ற அங்கீகாரத்தை வெளிக்காட்டாமல், ஒரு தொழிற்சாலையில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தார். ஆறு மாதங்கள் பணியாற்றிய சூர்யாவை, இயக்குனர் வசந்த் அவர்கள் எடுக்கும் அடுத்த படத்திற்கு நடிக்க அழைத்ததால் சூர்யா அவர்கள் அவ்வேலையில் இருந்து விலகிக்கொண்டார்.

தமிழ் சினிமா நடிகர்களின் குழந்தை பெயர்கள்

சூர்யாவின் திரையுலக வாழ்க்கை: 

surya

 • மணிரத்னம் அவர்களின் தயாரிப்பிலும், வசந்த் அவர்களின் இயக்கத்தில் உருவான “நேருக்கு நேர்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் காதலே நிம்மதி (1998),சந்திப்போமா (1999),பெரியண்ணா (1999),பூவெல்லாம் கேட்டுப்பார் (1999), உயிரிலே கலந்தது(2000) போன்ற படங்களில் நடித்தார். பின்னர், 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த “ஃபிரண்ட்ஸ்” திரைப்படம் சூர்யாவிற்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது.
 • அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே ஆண்டில் வெளியான “நந்தா” திரைப்படம் வெற்றி பெற்று, தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றுத் தந்தது. இந்த விருதின் மூலம் அவர் முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்திற்கு அழைத்து சென்றது. மேலும், பல படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்தார்.
 • அவர் நடித்த படங்களில் “நந்தா” படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர்  கௌதம் மேனன் எடுத்த “காக்க காக்க” திரைப்படம் அவரை மாஸ் ஹீரோவாக தமிழ் நெஞ்சங்களின் மனங்களில் பதிய செய்தது. குறுகிய காலகட்டங்களிலே பல திறமைகளை தன்னுள் வளர்த்துக் கொண்ட இவர் ஒரு தலைசிறந்த நடிகராக உருவெடுத்தார்.
 • சூர்யா அவர்கள் நடிக்கும் “வாரணம் ஆயிரம்” திரைபடத்திற்காக உடற்பயிற்சியின் மூலம் தனது எடையை குறைத்து, “சிக்ஸ் பேக்ஸ்” என்ற உடலமைப்பை தமிழ்த் திரையுலக நடிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் அவர், மன்மதன் அம்பு, அவன் இவன், கோ போன்ற படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
 • ஜனவரி மாதம் 2012 ஆம் ஆண்டில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட கேம் ஷோவான “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி தொடங்கிய நிகழ்ச்சியில், ஜூலை மாதம் 12 ஆம் தேதி வரை சூர்யா தொகுத்து வழங்கினார்.
 • சூர்யா அவர்கள் மலபார் கோல்ட் , சன்பீஸ்ட், சரவணா ஸ்டோர்ஸ், பாரதி சிமெண்ட்ஸ், இமாமி நவரத்னா, ஜண்டு பாம், க்ளோஸ்-அப் டூத்பேஸ்ட், ஏர்செல், டிவிஎஸ் மோட்டார்ஸ் போன்றவற்றின் விளம்பர தூதுவராக அங்கீகாரம் பெற்றுள்ளார்.
சிவகார்த்திகேயன் பயோடேட்டா

 

சூர்யாவின் திருமண வாழ்க்கை: 

நடிகர் சூர்யாவின் வாழ்க்கை வரலாறு

சூர்யாவின் காதல் மனைவியான ஜோதிகாவுடன்  “பூவெல்லாம் கேட்டுப்பார்” என்ற படத்தில் தொடங்கி உயிரிலே கலந்து, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், மற்றும் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படங்களில் நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக அவர்கள் பெற்றோர்களின் சம்மதத்திற்காக காத்திருந்தனர்.

பின்னர் பெற்றோர்களின் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் தேதி, இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவருக்கும் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி “தியா” என்ற மகளும், 2010 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி “தேவ்” என்ற மகனும் பிறந்தனர்.

ஆற்றிய பொது சேவைகள்:

சூர்யா அவர்கள் “அகரம் ஃபவுண்டேஷன்” என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளார். இதன் மூலம் பொது நலனுக்காகவும், பாதியிலே பள்ளிப் படிப்பை தொடரவிடாமல் கைவிட்ட ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் தன்னலமற்ற தொண்டாற்றி வருகிறார்.

மேலும் இவர், காசநோயாளிகளுக்கு இலவசமான சிகிச்சைகளையும் வழங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் புலிகளைக் காக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதுபோன்ற லாப நோக்கமற்ற அவரது தொண்டு நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகள் கல்விச் செல்வம் பெற்று வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர். இதுபோன்ற தன்னலமற்ற செயல்களால் சூர்யா அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்.

Surya Awards In Tamil:

 • 2001- ஆம் ஆண்டில் வெளியான “நந்தா” திரைப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை வென்றார்.
 • 2003- ஆம் ஆண்டு காக்க காக்க திரைபடத்திற்காக சிறந்த நடிகருக்கான ஐடிஎஃப்ஏ (ITFA) விருதை வென்றார்.
 • 2003- ஆம் ஆண்டு “பிதாமகன்” திரைபடத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான “ஃபிலிம்ஃபேர்” விருது வழங்கப்பட்டது.
 • 2004-ஆம் ஆண்டு “பேரழகன்” திரைபடத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர்” விருதினை வென்றார்.
 • 2005-ஆம் ஆண்டில் வெளிவந்த “கஜினி” திரைபடத்திற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்.
 • 2008-ஆம் ஆண்டு வெளிவந்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான “ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது மற்றும் ஆண்டின் ஸ்டைலிஷ் யூத் ஐகான் மற்றும் சவுத் ஸ்கோப்” போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி அப்படம் “தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை” வென்றது.
 • 2009- ஆம் ஆண்டில் வெளிவந்த “அயன்” மற்றும் “ஆதவன்” திரைப்படங்களுக்காக என்டர்டைனர் ஆஃப் தி இயர் (Entertainer of The Year) மற்றும் விஜய் விருதுகளை வென்றார்.
 • 2010- ஆம் ஆண்டில் வெளியான சிங்கம் படத்திற்காக “பிக் PM மற்றும் விஜய் விருதுகள்,  என்டர்டைனர் ஆஃப் தி இயர் (Entertainer of The Year)” போன்ற விருதுகளை வழங்கியது.
ரஜினி படங்கள் பட்டியல்
 • 2011-ஆம் ஆண்டு வெளியான “7 ஆம் அறிவு” படத்திற்கு சிறந்த தமிழ் முன்னணி நடிகர் SIIMA விருதினை வென்றார்.
 • 2012- ஆம் ஆண்டில் வெளிவந்த “மாற்றான்” படத்திற்கு சிறந்த நடிகருக்கான சினிமா விருதை வென்றார்.
 • 2013-ஆம் ஆண்டு “சிங்கம்-2” படத்திற்கு முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் என்ற SIIMA விருதினை வென்றது.
 • 2016- ஆம் ஆண்டு வெளியான “24” திரைப்படத்திற்கு SIIMA மற்றும் 2017-ல் மெரிட் விருதினை வென்றது.
 • 2020-ஆம் ஆண்டில் வெளிவந்த “சூரரைப் போற்று” படத்திற்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது மற்றும் கோல்டன் லோட்டஸ் விருது, வெள்ளி தாமரை விருது மற்றும் IFF விருதுகளை வென்றார்.
 • 2021-ஆம் ஆண்டு வெளியான “ஜெய் பீம்” படத்திற்கு நொய்டா சர்வதேச திரைப்பட விருது மற்றும் ஜூரி விருதினை வென்றது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 

 

Advertisement