நடிகர் விஜய்யின் வரலாறு | Actor Vijay History in Tamil
நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் உலக மக்கள் அனைவரையும் தன் நடிப்பு வசத்தால் கவர்ந்த தமிழ் திரைப்பட நடிகர் விஜய்யின் பயோடேட்டாவை படித்து தெரிந்துக்கொள்ளுவோம். நடிகர் விஜய் பின்னணி பாடகர், தயாரிப்பாளரும் கூட. விஜய் தனது 10-ஆம் அகவையில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராய் நடித்து வந்தார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். விஜய்யின் ரசிகர்கள் விஜய்க்கு வழங்கிய புகழ்பெயர் “இளைய தளபதி”. இன்றும் முக்கிய நடிகராக தமிழ் சினிமா துறையில் சிறப்பாக விளங்கி வருகிறார். இந்த பதிவில் விஜய் பற்றிய சிறப்பு தொகுப்பை காணலாம்.
தமிழ் சினிமா நடிகர்களின் குழந்தை பெயர்கள் |
விஜய் பிறப்பு:
சென்னை மாவட்டத்தில் ஒரு பட தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகரன் என்பவருக்கும், ஷோபா (பின்னணி பாடகர்) ஆகியோருக்கும் ஜூன் 22, 1974-ம் ஆண்டு மகனாக பிறந்தவர். விஜய்க்கு வித்யா என்ற ஒரு சகோதரியும் உண்டு. சகோதரி 2 வயதிலே இறந்துவிட்டார்.
கல்வி:
விஜய் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் கழித்தார். விஜய் தொடக்கத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் இணைந்தார். சென்னையில் லயோலா கல்லூரியில் விஜய் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார்.
திருமண வாழ்க்கை:
இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த சங்கீதா சொர்னலிங்கம் என்பவரை விஜய் திருமணம் செய்து கொண்டார். விஜய்க்கும் சங்கீதா அவர்களுக்கும் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
திரைக்கலை:
குழந்தையாக இருக்கும் போதே சில திரைப்படத்தில் நடித்து வந்தவர் விஜய். இவர் கதாநாயகனாக முதலில் நடித்த திரைப்படம் எதுவென்றால் நாளைய தீர்ப்பு. திரைப்படத்தில் மட்டுமல்லாமல் விளம்பரத்திலும் தனது நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.
ஆகஸ்ட் 2010 முதல் ஜோஸ் அலுக்காஸ் நகைக் கடைக்கு விளம்பரத்தில் நடித்தார். அதன் பிறகு 2011-ல் டாடா டோகோமா நகர்பேசி விளம்பரத்தில் நடித்தார். விஜய் தனது ரசிகர் நற்பணி மன்றத்தை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக 2009-ம் ஆண்டு மாற்றினார்.
இந்த அமைப்பு 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. அவரது உறவினர் விக்ராந்த் ஒரு நடிகர். அவரது மாமா எஸ்.என் சுரேந்தர் ஒரு பின்னணிப் பாடகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார்.
சன் டிவி சீரியல் இன்று |
இந்தி திரைப்படத்தில்:
2012-ல் வெளியான ரவுடி ரத்தோர் படத்தில் சிந்தா சிந்தா பாடலில் விஜய் தன் முதல் இந்திப்படக் கௌரவத் தோற்றத்தில் தோன்றினார். இப்படத்தை பிரபுதேவா இயக்க அக்ஷய் குமார் நடித்திருந்தார். விஜயின் கௌரவத் தோற்றம் இந்தி ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது.
தெலுங்கு திரைப்படத்தில்:
விஜய்யின் தமிழ் திரைப்படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. மொழிமாற்றம் செய்யப்பட்ட பெரும்பாலான திரைப்படம் வெற்றி அடைந்துள்ளது. வெற்றி அடைந்ததில் உதாரணத்திற்கு ஸ்னேஹிதுடு, துப்பாக்கி, ஜில்லா, போலிசோடு, ஏஜெண்ட் பைரவா மற்றும் அதிரிந்தி ஆகிய திரை படங்களை சொல்லலாம். விஜயின் திரை வாழ்க்கையில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களைப் பொறுத்த வரையில் மிகப்பெரிய திரைப்படத் தொடக்கமாக அதிரிந்தி படம் இருந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அந்த மாநிலத்திற்கு இருந்தது.
விளம்பர பணி:
விஜய் 2002-ல் கோக கோலா விளம்பரத்தில் நடித்தார். 2005-ல் சன்ஃபீஸ்ட் விளம்பரத்தில் நடித்து வந்தார். ஆகஸ்ட் 2010-ல் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கான விளம்பரத் தூதராக ஜோஸ் ஆலுக்காஸ் விஜயை ஒப்பந்தம் செய்தது. மேலும் டாடா டொகோமோ விளம்பரத்திலும் விஜய் நடித்தார்.
ஜீ தமிழ் சீரியல் இன்று |
விஜய்யின் அறப்பணி:
விஜய் ஒரு சமூக நல அமைப்புக்காக விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தைத் ஜூலை 26, 2009-ம் ஆண்டில் புதுக்கோட்டையில் தொடங்கினார். தமிழ்நாட்டில் தானே புயல் வந்த பிறகு, கடலூரில் உள்ள கம்மியம்பேட்டையில் ஒரு நிவாரண முகாமுக்கு இவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். பாதிப்படைந்த மக்களுக்கு விஜய் நிவாரண நிதியாக அரிசியை வழங்கினார். அந்நேரத்தில் கடலூர் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. சில உதவிகளை வழங்கியதன் மூலம் மக்களுக்கு விஜய் உதவினார். நவம்பர் 2014-ல், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற ஒரு தேநீர் கடை உரிமையாளரின் மகளான ஃபாத்திமாவுக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இடம் கிடைக்க விஜய் உதவி செய்துள்ளார்.
படிக்கும் மாணவர்களுக்காக கல்வி விருதுகளை 2012-ல் ஜூலை 8 ஆம் தேதி அன்று விஜய் மக்கள் இயக்கத்தால் சென்னை ஜே. எஸ். கல்யாண மண்டபத்தில் நடத்தப்பட்டது. நடிகர் விஜய்யே மாணவர்களுக்கு விருதுகளை நேரில் கொடுத்தார். விஜய் தனது பிறந்த நாளான 22 சூன் அன்று 2007-ல் எழும்பூர் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.
26 டிசம்பர் 2017-ஆம் ஆண்டு, பொள்ளாச்சியில் உள்ள விஜய் ரசிகர்கள், நோயாளிகள் மற்றும் உடலில் காயமடைந்தவர்களுக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ போன்ற இலவச தேவைகளை செய்தவர். 11 செப்டம்பர் 2017-ல், மருத்துவ சீட் பெறாமல் நீட் தேர்வில் தோல்வியை சந்தித்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு விஜய் நிதி உதவி வழங்கினார்.
சூன் 2018-ல், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிதி உதவி வழங்கினார். 22 ஆகஸ்ட் 2018-ம் ஆண்டு கேரளாவின் பல்வேறு இடங்களில் உள்ள தன் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் உதவியுடன் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள பொருட்களை விஜய் அனுப்பி வைத்துள்ளார்.
விஜய் டிவி சீரியல் இன்று |
கஜா புயலால் நவம்பர் 2018-ல் பாதிக்கப்பட்ட மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க தன் ஒவ்வொரு விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைமை நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் ரூ.4.5 லட்சம் விஜய் தொகையினை செலுத்தினார். இத்தனை அறப்பணிகளை கண்டு 2007-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து விஜய்க்கு டாக்டர் பட்டம் வந்தது.
சிவகார்த்திகேயன் பயோடேட்டா |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |