பால் ஏன் பொங்குகிறது | Why Does Milk Boil When it Boils in Tamil
அனைவரின் வீட்டில் டீ காபி குடிப்பது வழக்கமாக இருக்கும். டீ போடுவதற்கு முக்கியமான பொருள் பால் தான். பாலை தான் நாம் கொதிக்க வைப்போம். யாராவது யோசித்து இருப்பீர்களா? பால் கொதிக்க வைத்தால் மட்டும் பொங்கி வருகிறதே என்று. அதுவே தண்ணீரை எவ்வளவு நேரம் கொதிக்க வைத்தாலும் அதில் இருந்து தண்ணீர் பொங்கி வருவதில்லேயே என்று. அப்படி யோசித்திருந்தால் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு விளக்கம் அளிக்கும்.
பால் ஏன் பொங்குகிறது?
வீட்டில் உள்ள பெண்கள் அம்மாவிடம் பால் பொங்கி கீழ் ஊற்றிவிட்டால் அதற்கு திட்டு வாங்காமல் இருந்திருக்க மாட்டோம். ஒவ்வொரு முறை பாலை அடுப்பில் வைத்தால் அது பொங்கும் வரை அடுப்பின் பக்கத்தில் தான் இருக்க வேண்டும் பால் பொங்குகிறது, பச்சை தண்ணீர் ஏன் பொங்கமால் இருக்கிறது வாங்க தெரிந்துகொள்வோம்..!
பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், கார்போஹைதரேட், தாது பொருட்கள் இதெல்லாம் இருக்கிறது.
ஆகவே பாலை கொதிக்க வைக்கவும் போது கொழுப்பு, புரதம் இந்த இரண்டு பொருட்களும் பிரிந்து மேலே பொங்கி ஒரு லேயர் போல் காணப்படும். அதை தான் பாலாடை என்கிறோம். பாலில் உள்ள தண்ணீர் அதற்கு அடியில் இருக்கும்.கீழ் இருக்கும் தண்ணீர் நீராவியாகி மேல் வரவிடாமல் பாலாடை தடுத்துக்கொண்டு இருக்கும். இந்த நீராவி ஒரு கட்டத்திற்கு மேல் பாலாடையை தள்ளிக்கொண்டு வெளியில் வரும். இதை தான் பால் பொங்கி வருகிறது என்று சொல்கிறோம்.
வாழை இலையின் நடுவில் கோடு எப்படி வந்தது உங்களுக்கு தெரியுமா..?
பால் நன்மைகள்:
பால் என்பது அத்தியாவசிய பொருட்களில் ஒன்று. பால் சுவையை தாண்டி அதில் நிறைய சத்துக்களை கொண்டுள்ளது. புரதம், கொழுப்பு, சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது.
மற்ற பொருட்களில் இல்லாத சத்துக்கள் பாலில் இருப்பதால் நாம் தினமும் 500 மிலி அளவு பாலை குடிப்பது நல்லது.
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக பாலை குடிக்க வேண்டும் ஏன் என்றால் பாலையிலில் பொட்டாசியம் சத்துங்கள் உள்ளது.
சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை தினசரி உட்கொள்ள வேண்டும்.
பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பூரி மட்டும் ஏன் உப்புகிறது தெரியுமா..?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |