பயம் என்றால் என்ன.?
வணக்கம் நண்பர்களே.! மனிதன் மற்றும் விலங்குகள், பறவைகள் என்று எல்லா வகை உயிரினங்களுக்கும் பயம் ஏற்படும். பயம் என்பது அச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி. இந்த உலகில் பயப்படாதவர்கள் என்று யாருமில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயம் ஏற்படும். இந்த பயம் எப்படி வருகிறது, அதற்கான அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்.
பயம் வர காரணம்:
பயம் என்பது பல விதங்களில் ஏற்படும். அது எப்படி என்றால் அடுத்து என்ன நடக்க போகிறது, அடுத்து என்ன செய்வது, நாளைய நாளை பற்றி நினைப்பது இவற்றை பற்றி நினைத்தாலே பயம் உருவாகிறது. நீங்கள் நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்தை பற்றி நினைப்பதால் பயம் உருவாகிறது.
பயம் ஏற்பட இன்னொரு காரணம் நமக்கு ஏதோ விபத்து ஏற்பட போகிறது என்று தோன்றினால் கூட பயம் ஏற்படும். இந்த பயத்தை தான் கவலை, அச்சம், பதற்றம், மன அழுத்தம் போன்ற முறைகளில் வெளிப்படுத்துகிறோம்.
இதையும் படியுங்கள் ⇒ இதுமாதிரியான பழக்கங்கள் இருந்தால் நீங்கள் ஜீனியஸ்..! பகல் நேரத்தில் தூங்கினாலும் கூட..! வாங்க தெரிந்துகொள்வோம்
பயம் வருவதற்கான அறிவியல் காரணம்:
மனிதனுக்கு பயம் வருவதற்கு மூளையில் 5 விஷயங்கள் நடைபெறுகிறது. அது என்னவென்றால் Thalamus, Hypothalamus, Hippocampus, Sensory Cortex, Amygdala இந்த பகுதிகள் தான் பயம் வருவதற்கும், பயம் போவதற்கும் இந்த அமைப்பில் தான் சுழற்சிகள் ஏற்படுகின்றன.உங்களுக்கு தீடிரென்று அதாவது பயம் என்று அறிவதற்கு முன்னரே ஒரு பயம் தோன்றும். எடுத்துக்காட்டாக நீங்கள் ஐம்புலன்கள் வழியாக ஒரு பயத்தை உணர்ந்தால் அந்த உணர்ச்சி Thalamus -க்கு செல்லும். இந்த Thalamus இந்த விஷயம் அதிர்ச்சியானதாக இருந்தால் Amygdala செலுத்தி பின் Hypothalamus என்ற பகுதிக்கு செலுத்தும். அப்பொழுது தான் நமது உடல் முழுவதும் பயம் தோன்றுகிறது. இதனால் தான் பயம் ஏற்படுகிறது.
பயம் எப்படி வருகிறது என்று தெரிந்து கொண்டீர்கள். அது போல வந்த பயம் எப்படி போகிறது என்று தெரிந்து கொள்வோமா? பயம் தோன்றிய பிறகு Thalamus ஆனது Sensory Cortex என்ற பகுதிக்கு செலுத்தும். இந்த பகுதி தான் இந்த பயம் தேவையானதை என்று பிரித்தெடுக்கும். அதன் பிறகு பிரித்தெடுத்த தகவலை Hippocampus வழியாக Amygdala பகுதிக்கு செல்லும். Amygdala என்ற பகுதி Hypothalamus பகுதிக்கு செல்லும். அப்போது தான் உங்களுக்கு பயம் குறையும்.
பயம் ஏற்படுவது நல்லதா.? கெட்டதா.?
பயம் வருவதினால் உடலுக்கு மிகவும் நல்லது. எப்படியென்றால் பயம் வந்தவுடன் ஆக்சிஜன் உடல் முழுவதும் செல்லும். மேலும் உடல்களில் எந்த விதமான வலிகளும் ஏற்படாது.
பயம் திடீரென்று ஏற்பட்டு அதிலுந்து நீங்கள் மீண்டு வந்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே அந்த பயத்தினால் நீங்கள் எந்த வேலையும் செய்ய முடியாமல் தடுமாறும் போது பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் பயம் வரும் போது மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உடம்பு சிலிர்ப்பதற்கான அறிவியல் காரணங்கள் என்ன தெரியுமா.?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |