அமாவாசை பௌர்ணமி வருவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Amavasai Pournami Scientific Reason in Tamil

Amavasai Pournami Scientific Reason in Tamil

இனிமையான நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அமாவாசை பௌர்ணமி எப்படி வருகிறது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். மாதத்தில் ஒரு நாள் பௌர்ணமி ஒரு நாள் அமாவாசை வரும். பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு இருக்கும். அதுபோல அமாவாசை அன்று வானில் நிலவு இருக்காது. அமாவாசை பௌர்ணமி எப்படி வருகிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..? அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 இடி இடிக்கும் போது ஏன் “அர்ஜுனா” என்று சொல்கிறோம் காரணம் தெரியுமா..?

அமாவாசை பௌர்ணமி வர காரணம் என்ன..? 

பௌர்ணமி அன்று முழு நிலவு இருப்பதால் அது நிலவின் வளர்பிறை என்றும், அதேபோல அமாவாசை அன்று நிலவு இல்லாததால் அது நிலவின் தேய்பிறை என்றும் கூறுகிறோம்.

இதை தான் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை நாம் கூறிக்கொண்டு வருகிறோம். ஆனால் உண்மையில் நிலவு வளர்வதும் இல்லை தேய்வதும் இல்லை.

பூமி சூரியனை சுற்றி வருகிறது. அது நம் அனைவருக்குமே தெரியும். அதுபோல பூமியின் துணை கோள் என்று சொல்ல கூடிய நிலவு பூமியை சுற்றி வருகிறது.

 நிலவு பூமியை சுற்றி 1 முறை வலம் வருவதற்கு 29 1/2 நாட்கள் ஆகிறது. இருந்தாலும் நிலவுக்கு சூரியனிடம் இருந்து தான் ஒளி கிடைக்கிறது. நிலவானது சூரியனிடம் இருந்து பெற்ற ஒளியை எந்த அளவிற்கு பூமியில் பிரதிபலிக்கிறதோ அதை வைத்து தான் அம்மாவாசை பௌர்ணமி நிகழ்கிறது.  

அமாவாசை எப்படி வருகிறது..? 

அமாவாசை எப்படி வருகிறது

பொதுவாக  பூமியில் இருந்து நிலவின் ஒரு பகுதியை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். அதுபோல நிலவானது பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் சுற்றி வரும் போது, நமக்கு தெரியாத நிலவின் வேறு பகுதியில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது .

அந்த நேரத்தில் நிலவானது நம் கண்களுக்கு தெரியாது. இதை தான் நாம் அமாவாசை என்று சொல்கிறோம்.

பௌர்ணமி எப்படி வருகிறது..? 

பௌர்ணமி எப்படி வருகிறது

அதுபோல அமாவாசை முடிந்து சில நாட்கள் வரை நிலவின் மீது ஒளி இருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலவின் மீது ஒளியின் பிரதிபலிப்பு அதிகமாகும்.

பின்பு  பூமிக்கு எதிரே இருக்கும் நிலவின் முழு பகுதியிலும் சூரிய ஒளிபடுகிறது. அந்த நேரத்தில் சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி இருப்பதால், நிலவானது சூரிய ஒளியை முழுமையாக பெற்று பிரதிபலிக்கிறது.  இதை தான் நாம் பௌர்ணமி என்று சொல்கிறோம்.

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 மழைப் பெய்யும் போது மண்வாசம் வர காரணம் என்ன..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts