ATM மெஷினை பற்றிய வியக்க வைக்கும் சில உண்மைகள்..! ATM Machine Facts in Tamil..!
இன்றைய நவீன உலகில் மனிதர்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்று ATM மெஷின் ஆகும். இந்த ATM என்பது கணினியுடன் தொடர்புடைய ஒரு மின்னணு இயந்திரம் ஆகும். இந்த இயந்திரம் இருப்பதால் நாம் வங்கிகளுக்கு அடிக்கடி சென்று பணம் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இந்த இயந்திரத்திலேயே மிக எளிதாக நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்கிறோம். உலகளவில் பெரும் பணியாற்றி வரும் இந்த ATM-களை இயக்க வங்கிகளால் வாங்கப்படும் ATM கார்ட் ஒரு சாவியாக பயன்படுகிறது. சில பட்டன்களை தட்டியவுடன் சில வினாடிகளில் நமது பணம் தேவைகளை பூர்த்தி செய்ய 24 மணி நேரம் காத்து கிடக்கும் ATM-ஐ பற்றியும் அதன் ATM கார்டு பற்றியும் பலரும் அறியாத சில தகவல்களை இன்று நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
ATM Machine Facts in Tamil:
நாம் பணம் எடுக்க பயன்படுத்து ATM கார்டுக்கு ஏன் நான்கு இலக்கில் password கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரியுமா? ATM இயந்திரத்தின் உருவாக்கத்திற்கும், அதன் முன்னேற்றத்திற்கும் முன்னோடியாக இருந்த ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் 1960-துகளில் பாதுகாப்பான பணம் பரிவர்த்தனைக்கு ஏற்றதாக ATM இயந்திரத்தில் வங்கி கணக்கை அணுக 6 இலக்கு கொண்ட ரகசிய எண்கள் முறையை வடிவமைத்தாராம்.
ஆனால் அவரது மனைவி கரோலின் 6 இலக்கங்கள் கொண்ட ரகசிய எண்களை நினைவில் கொள்ளமுடியவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார் 4 இலக்கு கொண்ட எண்ணாக மாற்றி இருக்கிறார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேஸ் சிலிண்டர்ல இனி இந்த நம்பரை செக் பண்ணாமல் சிலிண்டர் வாங்கிடாதீங்க..!
இந்த 4 இலக்கு எண் பயனர்களால் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்ததால் இதுவே பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சுசர்லாந்து போன்ற நாடுகளில் ATM இயந்திரங்களில் 6 இலக்கு Pin நம்பரை கொண்டவையாகவே ATM இயந்திரங்கள் இருக்கின்றன.
ATM என்பதால் ஆங்கில விரிவாக்கம் Automated teller machine என்பதாகும், இருந்தாலும் பெரும்பாலான நாடுகளில் இதனுடைய பெயர்கள் வெவ்வேறாக காணப்படுகிறதாம்.
உலகின் முதல் ATM இயந்திரம் 1967-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் நாள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பார்க்லேஸ் (Barclays) என்ற வங்கியின் சார்பாக நிறுவப்பட்டது.
இந்தியாவின் முதல் ATM இயந்திரம் 1987-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் HSBC என்ற கார்ப்பரேட் வங்கியால் நிறுவப்பட்டது.
மேலும் இந்தியாவின் முதல் மிதக்கும் இயந்திரம் 2004-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள அரசுக்கு சொந்தமான ஜாங்கர் படகில் SBI வங்கியால் நிறுவப்பட்டது.
ATM மெஷினில் முன்பெல்லாம் பணம் மட்டும் தான் எடுக்க முடியும். ஆனால் இப்பொழுது பணம் Transaction செய்யவும் முடிகிறது. அந்த அளவிற்கு தொழில்நுட்ப்பம் வளர்ச்சியடைந்துள்ளது.
ஆனால் ஆன்லைன் ஷாப்பிங், மொபைலில் பணம் பரிவர்த்தனை அனைத்திற்கும் ATM கார்டு தான் பயன்படுகிறது. இத்தகைய ATM கார்டு polyvinyl chloride acetate என்னும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுகிறது.
இந்த ATM கார்டின் பின் பகுதில் Magnetic Type-ம் முன் பகுதில் 16 இலக்கு உள்ள எண்களும் இருக்கும். இந்த 16 இலக்கு எண்களுக்கு பின்புறம் நிறைய ரகசியங்கள் மறைந்துள்ளனர்.
இந்த 16 எண்களில் உள்ள முதல் 6 எண்கள் Issuer Identification Number என்று அழைக்கப்படுகிறது. இது வங்கி உங்களுக்கு வழங்கிய ATM அட்டையின் வகை என்பதை குறிக்கிறது. அதாவது அட்டையின் முதல் எண் நான்கில் தொடங்கினாள் அது VISA வகை அட்டை ஆகும். ஒரு வேலை உங்கள் அட்டை எண் ஐந்தில் தொடங்கினாள் Mastercard அட்டை வகை ஆகும்.
இது போன்று 0 முதல் 9 வரை தொடங்கும் பலவகை அட்டைகள் உள்ளன.
அதன் பிறகு உங்கள் உங்கள் ATM அட்டையின் 7 முதல் 15 வரை உள்ள 9 எண்கள் உங்கள் வங்கியின் அக்கௌன்ட் நம்பருடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும். இறுதியாக இருக்கும் 16-வது எண் Check Digit என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் ATM அட்டை பயன்படுத்தகூடித்தாக இருக்கிறதா இல்லையா என்பதை சோதிக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஏன் எல்லா வண்டி டயரும் கருப்பாக இருக்கிறது என்று தெரியுமா.?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |