வெங்காயம் தேய்த்தால் முடி வளருமா?

Advertisement

வெங்காயம் தேய்த்தால் முடி உதிர்வு தடுக்கப்படுமா? Can Onion Juice Stop Hair Loss?

Can Onion Juice Stop Hair Loss? – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. தற்பொழுது பெருபாலானோருக்கு எழும் கேள்வியாக இருப்பது என்னவென்றால் வெங்காயம் தேய்த்தால் முடி வளருமா? வளராத என்பது குறித்து தான். ஏற்கனவே உதிர்ந்த முடியாக இருந்தாலும் சரி, புதிதாக முடி உதிர்வதற்கு வாய்ப்பாக இருந்தாலும் சரி அதற்கு வெங்காயம் தேய்த்தால் முடி உதிர்வு சரியாகுமா. மீசை தாடி வளர வெங்காயத்தை தேய்த்தால் முடி வளரும் என்று பலர் கூறுகின்றன அது உண்மையா? என்று மக்களிடையே நிறைய கேள்விகள் இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். இன்றைய பதிவில் முழுக்க முழுக்க வெங்காயம் தலைமுடிக்கும் தேய்த்தால் முடி வளருமா வளராத என்பது குறித்து தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது அறிவியல் ரீதியான ஆதாரம் இருக்கிறதா? என்று படித்து பயன்பெறலாம்.

வெங்காயம் தேய்த்தால் முடி வளருமா? – Can Onion Juice Stop Hair Loss?

வெங்காயத்தை தலைக்கு பயன்படுத்துவதால் முடி உதிர்வு பிரச்சனை தடுக்கப்படுமா என்று கேட்டால், ஒரு குறிப்பிட்ட சதவீதம் அந்த பிரச்சனைக்கு பலனளிக்கும்.

முடி உதிர்வுக்கான காரணங்கள்:

முடி உதிர்வு பெரும்பாலோனோருக்கு மிக பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்றால்.. முடியின் வேர் கால்களில் ஏற்படக்கூடிய வறட்சி, சத்து குறைபாடு, உடல் உஷ்ணம், சரியான அளவு ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, அதிகப்படியான பொடுகு, தலைக்கு ஹீட்டர் பயன்படுத்துவது, கெமிக்கல் அதிகம் நிறைந்த ஷாம்புக்களை பயன்படுத்துவது என்று நிறைய காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். இது தவிர உங்கள் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி இவர்களுக்கு வழுக்கை, முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது என்றால் நமக்கும் அந்த பிரச்சனை வரும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சூரியன் ஏன் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

வெங்காயம் தலைமுடிக்கு எப்படி பயனளிக்கிறது?Can Onion Juice Stop Hair Loss

வெங்காயத்தில் உள்ள சல்பர் எனப்படும் புரதம் வெங்காயத்தில் இயர்கையாவே கிடைக்கிறது என்பதால், இவற்றை தலைக்கு பயன்படுத்தும் போது, முடி கால்களில் ஏற்கனவே சல்பர் குறைபாடு இருந்தால், முடியின் வேர் கால்கள் வலுவிழக்காமல் பார்த்துக்கொண்டது என்றால் முடி கொட்டுவது குறிப்பிட்ட சதவீதம் குறையலாம். ஆக இந்த ஒரு ஆதாரம் முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வாக இருக்க முடியும்.

இந்த ஒரு அறிவியல் ரீதியான ஆதாரத்திற்காகத்தான் இப்பொழுது டீவியில் வெங்காய ஷாம்பு, வெங்காய சோப்பு, வெங்காய ஆயில் என்று பலவிதமான விளம்பரங்களை செய்கின்றன. இவற்றை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதற்கு பதில் நாம் இயற்கையான முறையை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

வெங்காயம் தலைக்கு பயன்படுத்தும் முறை – Which Onion is Good for Hair Growth Small or Big:

வெங்காயத்தை அப்படியே தலை முடியில் அப்ளை செய்தால் அது முடி உதிர்வு பிரச்சனையை அதிகரிக்குமே தவிர குறைக்காது. வேறு எப்படி பயன்படுத்தலாம் என்றால், சின்ன வெங்காயமோ, பெரிய வெங்காயமோ எதுவாக இருந்தாலும் சரி அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அறிந்துகொள்ளுங்கள்.

பிறகு அவற்றில் இருந்து சாறு பிழிந்து ஜூசை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். பின் ஒரு பங்கு வெங்காய சாறுடன் மூன்று மடங்கு கற்றாழை ஜெல் அல்லது தேங்காய் எண்ணெய் செய்து நன்றாக மிக்ஸ் செய்து தலைமுடியின் வேர் கால்களில் நன்றாக அப்ளை செய்து 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். பிறகு எப்பொழுது போல தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி தலை அலசவும்.

வெங்காய சாறு முடி வேர்களுக்கு வலுவளிப்பதுடன் மட்டுமல்லாமல் பொடுகு, அரிப்பு, Fungal Infection போன்றவற்றை குறைக்கும்.

மீசை தாடி வளருமா?

மீசை தாடி என்பது ஆண்களுக்கு ஹார்மோன்களின் காரணமாக தான் வளரும் தவிர வெங்காயம் தடவினால் மீசை தாடி வளரும் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை இல்லை.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement