மெழுகுவர்த்தி உருகி மறுபடியும் மெழுகாக காரணம் என்ன தெரியுமா..?

Cause the candle to melt and become wax again in tamil

மெழுகுவர்த்தி உருக காரணம் 

ஹலோ பிரண்ட்ஸ்..! உங்கள் வீட்டில் மெழுகுவர்த்தி இருக்கா..? என்னது மெழுகுவர்த்தியா என்று கேட்பீர்கள். நீங்கள் கேட்பதில் ஒன்றும் தவறில்லை. ஏனென்றால் இன்றைய நிலையில் அனைவரின் வீட்டிலும் மண்ணெண்ணெய் விளக்கே இல்லை. அப்புறம் எப்படி மெழுகுவர்த்தி இருக்கும் சொல்லுங்கள். முன்பெல்லாம் மின்சார வசதி கிடையாது. அதனால் விளக்கு, மெழுகுவர்த்தியை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது தான் உலகம் முழுவதும் மின்சார வசதி இருக்கிறது. அதனால் இதெல்லாம் அவ்வளவாக பயன்படுவதே இல்லை. ஆனால் நாம் அனைவருமே மெழுகுவர்த்தி எரிவதை பார்த்திருப்போம். அப்படி மெழுகுவர்த்தி எரியும் போது அது உருகி மீண்டும் மெழுகாக மாறும். இதற்கு என்ன காரணம் தெரியுமா..? தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மெழுகுவர்த்தி உருக காரணம் என்ன..? 

what causes the candle to melt

பொதுவாக நாம் அனைவருமே மெழுகுவர்த்தி எரிவதை பார்த்திருப்போம். மெழுகுவர்த்தி உருகி மீண்டும் மெழுகாக மாறிவிடுகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்வதற்கு முன் மெழுகுவர்த்தி உருக காரணம் என்ன என்று பார்க்கலாம்.

மெழுகுவர்த்திகளின் பயன்பாடு கிமு 3,000 ஆண்டுக்கு முந்தையது. இதேபோல், பண்டைய ரோமானியர்கள் மெழுகுவர்த்தியின் மற்றொரு ஆரம்ப வடிவத்தை உருவாக்க, விலங்குகளின் ஒரு வடிவமான கொழுப்பில் திரிகளை நனைத்து பயன்படுத்தினர்.

புள்ள பூச்சியை கொள்ள கூடாது என்று சொல்ல காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா

நாம் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது, ​​அது சுடரின் வெப்பத்தால் திரியைச் சுற்றியுள்ள மெழுகு உருகுகிறது. மெழுகுவர்த்தியை வேகமாக எரிய வைக்கும் மிக முக்கியமான மூலப்பொருள் மெழுகு தான். மென்மையான மெழுகு அதிக எண்ணெய் உள்ளடக்கம் மற்றும் குறைந்த உருகும் வெப்பநிலையை கொண்டிருக்கிறது. எனவே அது வேகமாக எரிந்து உருகுகிறது.

மெழுகுவர்த்தி உருகி மறுபடியும் மெழுகாக காரணம்:

what causes the candle to melt மெழுகுவர்த்தி உருகி ஒரு எரிப்பு எதிர்வினை மூலம் ஆவியாகிறது. அப்படி ஆவியாகும் போது ஹைட்ரோகார்பன்கள் ஆக்ஸிஜனுடன் தொடர்புகொண்டு அதை 2 கூறுகளாக உடைகின்றன. ஹைட்ரஜன் மற்றும் கார்பன் என்பது இது ஒளி, வெப்பம், கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராவி ஆகியவற்றை வெளியிடுகிறது. மேலும் சுடரை எரிபொருளாக மாற்றுகிறது.

எனவே மெழுகுவர்த்தி சூடாக்கும் போது உருகி, அது மீண்டும் குளிர்ச்சியால் திட மெழுகாக மாறுகிறது. இப்படி தான் மெழுகுவர்த்தி உருகி மீண்டும் மெழுகாக உருகுகிறது.

தொட்டால் சிணுங்கி இலை தொட்டவுடன் சுருங்க காரணம் என்ன

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts