இருட்டில் சாப்பிட கூடாது ஏன் தெரியுமா..? இதற்கு உண்மை என்ன தெரியுமா..?

Do not eat in a dark place in tamil

இருண்ட இடத்தில் சாப்பிட கூடாது ஏன் தெரியுமா?

நண்பர்களே வணக்கம்.! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக இந்த கேள்வியானது எல்லோருடைய வீட்டிலும் சொல்லி கேட்டிருப்போம். அதாவது நாம் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது கரண்ட் போய்ட்டு என்றால் அம்மா சாப்பிடுவதை நிறுத்து என்று சொல்வார்கள். அதற்கு காரணம் கேட்டு இருப்பீர்கள் ஆனால் அதற்கு காரணம் சொல்லாமல் இருப்பார்கள்.

இல்லையென்றால் பேய் உங்களை கூட சாப்பிடும் என்று சொல்வார்கள். உங்களுக்கு சாப்பிட்டது போல் இருக்காது என்று நிறைய காரணம் சொல்வார்கள். ஆனால் உண்மை அது அல்ல. இன்று, விஞ்ஞானம் என்று சொல்வதை அன்றைய நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்றார்கள். வாங்க அது என்ன உண்மை என்று படித்து பார்த்து தெரிந்துகொள்வோம்.

இருட்டில் சாப்பிட கூடாது ஏன் தெரியுமா?

 இருட்டாக உள்ள இடத்தில் சாப்பிட்டால் உணவில் பூச்சிகள் விழும்  கொசு, ஈ விழும் என்பதனாலும் சாப்பிடக்கூடாது என்பார்கள். இதனால் சில நேரங்களில் மனிதனின் உயிருக்கு ஆபத்து வரவும் வாய்ப்பு உள்ளது. இதுவும் ஒரு காரணம்  சாத்திரத்திரத்தில் சொல்வதை பார்ப்போம் வாங்க.

மகாபாரதத்தில் பீமன் சிறுவயதில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது விளக்கு அணைந்து விட்டது அப்போது அணைந்து தெரிந்தும் அவன் சாப்பிடுவதை நிறுத்தாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

அர்ஜுனன்: பீமா சாப்பிடுவதை நிறுத்து வெளிச்சம் வந்து பிறகு சாப்பிடு என்றான்.

பீமன்: நம்முடைய உணவை சரியாக கைகளை எடுக்கிறது அதன் பின் அது வாய்க்கு கொண்டு செல்கிறது இதற்கு ஏன் வெளிச்சம் என்று கேட்கிறான். இதை போல் ஒரு தாயிடம் கேட்கிறான் சிறுவன்.

அதற்கு தாய் அந்த பீமன் போல் கேட்பது சரிதான். சாப்பிட உணவு வாய்க்குள் போகும் ஆனால் யார் வாய்க்குள் போகும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

சொக்கா சொக்கா சோறுண்டா? சோழியன் வந்து கெடுத்தான்டா” என்ற ஒரு பழமொழி இருக்கிறது எதற்காக இந்த பழமொழி வந்து தெரியுமா? 

அது ஏன் என்று தெரிந்துகொண்டால் நீயும் இருளில் சாப்பிடவதை நிறுத்தி விடுவாய் என்று சொன்னால். 

இதையும் தெரிந்துகொள்ளவும்👉👉 கோவிலுக்குள் செருப்பு போட கூடாது என்று சொல்ல காரணம் என்ன..? 

ஒருவர் இறந்து போகும் நிலையில் அவருடைய உடல் மட்டுமே உலகை விட்டு போகும் அவருடைய ஆத்மா உலகை விட்டு போகாது. அதேபோல் இருப்பவர்களுக்கு ஏதேனும் ஆசை இருந்தால் அதனை செய்பவர்களுடன் இருக்குமாம். அதேபோல் அந்த ஆத்மாவுக்கு இருள் பிடிக்கும் என்பதனால் அந்த நேரத்தில் தான் அலையும் என்றும் சொல்கிறார்கள். அதன் பின் பெரிய கதையே உள்ளது. 

 அது கதையாக இருக்கலாம். ஆனால் சாஸ்திர படி பார்த்தால் இருட்டு பிடிக்கும் என்பதனால் அந்த நேரத்தில் கெட்ட சக்தியின் அட்டகாசம் அதிகமாக இருக்கும். அதனால் அந்த நேரத்தில் சாப்பிட்டால் உடலுக்கு கேடு என்பதனாலும் இருட்டில் சாப்பிடகூடாது என்கிறார்கள்.  
கோவிலில் சாமி வந்தது போல் ஆடுவதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா ?
கோவிலில் ஏன் தேங்காய் உடைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

 

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts