Do you Know Why Our Cheeks Turn Red When We Are Shy in Tamil
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்..! நாம் சில நேரத்தில் சில உணர்ச்சிகளை அடைகிறோம். அது மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லது துன்பமாக இருக்கலாம் அல்லது அழுகையாக இருக்கலாம். ஆனால் நாம் என்ன செய்தாலும் நம் உடலில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அப்படி நமக்கு ஏற்படும் ஒன்று தான் வெட்கம். இந்த வெட்கம் அனைவருக்கும் அனைத்து இடத்தில் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
சிலருக்கு சிலவற்றை பேசும்போது, சிலருக்கு சிலரை பார்த்தால் இந்த வெட்கம் ஏற்படுகிறது. இந்த வெட்கத்தின் போது நம்முடைய முகம் சிவப்பு நிறத்தை அடைகிறது. அது ஏன் அப்படி சிவப்பு நிறத்தை அடைகிறது நமக்கு வெட்கம் வரும்போது மட்டும் தான் இந்த சிவப்பு நிறத்தை அடைகிறோமா என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!
Do you Know Why Our Cheeks Turn Red When We Are Shy in Tamil:
நாம் வெட்கப்படும் போது நம்முடைய உடல் அதனை ஒரு அழுத்தமாக எடுத்துக்கொண்டு நம்முடைய உடலில் Sympathetic Nervous System விரிய தொடங்கும்.
இந்த Sympathetic Nervous System நம்முடைய உடலுக்கு ஏதோ தீங்கு வருகிறது என்று நினைத்து அதனை எதிர்த்து போராட அல்லது அதனை விட்டுவிட்டு ஓடு என்று தூடுதலை ஏற்படுத்தி Adrenal Gland மூலம் Adrenal என்ற ஹார்மோன் உருவாகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பூச்சியின் இரத்தத்தில் இருந்து லிப்ஸ்டிக் தயாரிக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா
இந்த ஹார்மோன் நம்முடைய சுவாசத்தை அதிகப்படுத்தி இரத்த குழாய்களை விரிவடைய செய்யும். ஆகவே நம்முடைய உடலில் இரத்தமும் ஆக்ஸிஜன் உடலில் அனைத்து பக்கமும் அதிகமாக செல்லும்.
இதுபோல் இரத்தம் அனைத்து பக்கமும் செல்வதால் மற்ற இடத்திற்கு செல்வதை விட முகத்தின் தோலினுடைய மேற்பரப்பிற்கு பக்கம் இருப்பதால் கன்னம் சிவப்பாக தெரிகிறது.
இது அனைவருக்கும் தெரியாது. அவர்களுடைய நிறத்தை பொறுத்து மாறுபடும். அதேபோல் வெட்கப்பட்டால் மட்டும் கன்னம் சிவக்கும் என்பது தவறு. சிலருக்கு கோவப்பட்டாலோ பயந்தால் அல்லது சிரித்தால் கூட சிலருக்கு கன்னம் சிவக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉 தயிருடன் எதை சேர்த்து சாப்பிட்டால் இறப்பதற்கு வாய்ப்புள்ளதா
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |