பெண்கள் ஏன் சுடுகாட்டிற்கு போகக்கூடாது தெரியுமா?

Advertisement

Do You Know Why Women Should Not Go To Crematoriums in Tamil

தினமும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை பற்றி பார்த்துக்கொண்டு தான் வருகிறோம். அந்த வகையில் இன்று சுடுகாட்டிற்கு ஏன் பெண்கள் செல்ல கூடாது என்று தெரிந்துகொள்ள போகிறோம்.

பொதுவாக அனைத்து இடத்திலும் முதன்மை நிலையில் இருக்கும் பெண்கள் சுடுகாட்டிற்கு மட்டும் செல்வதில்லை, அந்த காலத்திலிருந்து இந்த சம்பரதாயம் செய்து தான் வருகிறோம். எவ்வளவு மாறினாலும் சில விஷயங்ககள் மட்டுமே மாறுகிறது. ஒரு சில விஷயங்கள் மட்டும் அப்படியே உள்ளது. அதில் இந்த பெண்கள் சுடுகாட்டிற்கு போகக்கூடாது என்பதும் உள்ளது. அதனை பற்றி தெரிந்துகொள்ளவோம் வாங்க..!

பெண்கள் ஏன் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது:

பெண்கள் தான் ஒரு உயிரை உலகத்திற்கு தெரியப்படுத்துகிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் பெற்ற பிழையாக இருக்கட்டும், அல்லது கணவராக இருக்கட்டும் அவருக்கு செய்யவேண்டிய சுடுகாட்டு காரியங்களில் பெண்களை சேர்க்கவும் மாட்டார்கள் அதேபோல் பெண்கள் சுடுகாட்டிற்கு போகவும் மாட்டார்கள்.

இதற்கு முக்கியமான காரணம் மூடபழக்கவழக்கம் இந்த சமூகத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடும் என்றும் சொல்லலாம்.

இதையும் பாருங்கள் –> கோவிலில் மணி அடிப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?

அந்த காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்று சொல்வார்கள் அவர்கள் எப்படி சுடுகாட்டிற்கு செல்லமுடியும் என்றும் சொல்வார்கள்.

அதில் முதலில் சொல்லப்படுவது சுடுகாடு காத்துக்கறுப்பு, மோகினி, இரத்த காட்டேரிகளுக்கு சொந்தமானது என்றும் அங்கு பெண்கள் சென்றால் அவர்களின் மீது இறங்கி அவர்கள் மூலம் ஆசையை நிறைவேற்றி கொள்வார்கள், ஆண்கள் மீது இறங்காத என்றும் நினைக்கலாம் பெண்கள் மிகவும் மிருதுவானவர்கள் ஆகையால் அவர்கள் மீது இறங்குவது என்றும் நம்பபடுகிறது.

இரண்டாவது சொத்து பிரச்சனை அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தால் இன்னொருவர் வீட்டிற்கு போகப்போகிறது என்று சொல்லி அவர்களுக்கு நகைகளை அணிவித்து வேறு ஒருவர் வீட்டிற்கு மருமகளாக அனுப்பிவைப்பார்கள். பெண்களுடைய உறவு பதியிலேயே முடிந்து விடுகிறது.

 ஆனால் ஆண் வாரிசு அப்படி இல்லை பெற்றோர்களை கடைசி வரைக்கும் வைத்து காஞ்சி ஊற்றுவான் என்றும் சொல்வார்கள். வீதி வரைக்கும் மனைவி, காடுவரைக்கும் பிள்ளை என்றும் சொல்வார்கள். கடைசி வரைக்கு சுடுகாட்டிற்கு வருவது ஆண் வாரிசு தான். 

தங்களுக்கு கொள்ளிவைக்கும் ஆண் வாரிசுக்குத்தான் அவர்கள் சொத்துக்கள் என்றும் சுடுகாட்டிற்கு ஆண் பிள்ளைகள் மட்டுமே வருகிறார்கள்.

அன்று தொடங்கிய இந்த கட்டுப்பாடுகள் இன்று வரை செயல்படுத்தி தான் வருகிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகள் இல்லாத வீட்டில் உள்ள பெண்கள் கொள்ளிவைக்கும் செயல்பாடுகள் இன்று வரை நடந்துகொண்டு தான் இருக்கிறது.

இதையும்  தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 கோவிலில் பெண்கள் ஏன் குருக்களாக இல்லை..? அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement