கொட்டாவி விட்டால் ஏன் கண்களில் தண்ணீர் வருகிறது தெரியுமா..?

Advertisement

Do you Know Why Your Eyes Water When You Yawn in Tamil

மனிதனுக்கு இயற்கையாக நிறைய விஷயத்தை நிறுத்த நினைத்தாலும் நிறுத்த முடியாது. அதில் ஒன்று தான் இந்த கொட்டாவி. இந்த கொட்டாவி பெரும்பாலும் தூக்கம் வாந்தால் மட்டும் தான் வருகிறது என்பார்கள். ஆனால் பொதுவாக மனிதன் முதல் மிருகங்கள் வரை அவ்வளவு ஏன் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் வரை கொட்டாவிடும்..! இந்த கொட்டாவி ஏன் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அல்லது அதற்கு உண்மையான பதில் தான் உங்களுக்கு கிடைத்துள்ளதா..? தெரியவிலை என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

கொட்டாவி எப்படி வருகிறது:

கொட்டாவி வருவதற்கு முக்கிய காரணம் மூளை தான். அது எப்படி என்றால்  நம்முடைய உடலின் வெப்பநிலை 30 செல்சியஸ் முதல் 40 செல்சியஸ் வரை இருக்கும். சராசரியாக 37 செல்சியஸ் இருக்கும். ஆகவே நம்முடைய மூளையின் வெப்பநிலை எப்போது அதிகமாகிறதோ அப்போ தான் மூளை கொட்டாவியை வரவழைத்து உடலை குளிர்ந்த நிலையில் இருக்க செய்கிறது.

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 20 முறை கொட்டாவி விடுகிறார்கள்.  அதேபோல் நாய், பூனை, சிங்கம், புலி போன்ற முதுகெலும்பு உள்ள உயிரினங்கள் அனைத்தும் கொட்டாவி விடும் அவ்வளவு ஏன் கருவில் உள்ள குழந்தை கூட கொட்டாவி விடும்.

ஒருவருக்கு கொட்டாவி வந்தால் மற்றவர்களுக்கு கொட்டாவி வருவதற்காக காரணம் என்ன தெரியுமா..? தெரிந்துகொள்ள 👉👉 👉 கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா..?

கொட்டாவி வரும் போது கண்ணீர் வருவது ஏன்..?

நாம் கொட்டாவி விடும் போது கண்களில் தண்ணீர் வருகிறது ஏன் என்று தெரிந்துகொள்ள மருத்துவர்களிடம் செல்வார்கள். ஆனால் கொட்டாவி விடும்போது கண்களில் தண்ணீர் வந்தால் நமக்கு ஒன்றும் ஆகாது. அப்புறம் ஏன் கண்களில்  தண்ணீர் வருகிறது என்றால்  நாம் கொட்டாவி விடும்போது கண்களை இறுக்கமாக மூடி கண்ணீர் சுரப்பிகளில் இறுக்கம் அதிகமாகி கண்களிலிருந்து தண்ணீர் வருகிறது  

கொட்டாவி ஏன் வருகிறது காரணம் தெரியுமா..?

கொட்டாவி அதிகமாக வந்தால் நல்லதா கெட்டதா..?

கொட்டாவி வருவது பிரச்சனை இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக வருவது தான் பிரச்சனை. அதாவது கல்லிரல் பிரச்சனை, மூளை, கை கால் வலிப்பு, சரியாக  தூங்கமால் இருப்பது போன்றவற்றால் கொட்டாவி வருகிறது. அதேபோல் சில மருந்துகளிலிருந்து வரும் பக்கவிளைவுகளாலும் கொட்டாவி வரலாம்.

மூளையில் பிரச்சனை இருந்தால் கொட்டாவி வருமா..? மூளை சத்துக்கள் இல்லமால் இருந்தாலும், சுறுசுறுப்பு இல்லாமல் இருந்தாலும் கொட்டாவி வரும்.

சாமி கும்பிடும் போது கொட்டாவி வந்தால் என்ன பலன்..! அப்படி கொட்டாவி வந்தால் கெட்ட ஆவியா..!

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement