உடற்பயிற்சி செய்தால் நார்மல் டெலிவரி ஆகும்..! இது உண்மையா..? பொய்யா..?

Advertisement

Does Exercise Lead To Normal Delivery in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவு என்ன என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரி பொதுவாக குழந்தை பிறப்பது என்பது ஒரு வரம். அதுவும் பெண்கள் என்றாலும் ஒரு வரம் தான். ஏனென்றால் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் பெண்களுக்கு மட்டும் தான் உள்ளது. ஒரு குழந்தை பிறப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. இது நம் அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் நம் நாட்டில் பல ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிறார்கள். சரி அதை விடுங்க. நாம் இப்போது நம் பதிவிற்கு வருவோம். சிலர் கர்ப்பமாக இருக்கும் போது உடற்பயிற்சிகள் செய்யுங்கள் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொல்வார்கள். அது உண்மையா..? பொய்யா..? என்று பார்க்கலாம் வாங்க..!

உடற்பயிற்சி செய்தால் நார்மல் டெலிவரி ஆகுமா..? 

உடற்பயிற்சி செய்தால் சுகப்பிரசவம் ஆகுமா

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அனைவருக்குமே சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்குமே சுகப்பிரசவம் ஆகும் என்று சொல்லமுடியாது.

அதனால் பலரும் உடற்பயிற்சிகள் செய்யுங்கள் சுகப்பிரசவம் ஆகும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சிகள் செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய விரும்புவர்கள் உடற்பயிற்சி செய்தால் நார்மல் டெலிவரி ஆகுமா..? என்று கேட்பார்கள்.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ கலந்த பாலை குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று சொல்ராங்களே அது உண்மையா

ஆனால் உண்மை என்னவென்றால், கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சிகள் செய்வது  உடலை உறுதியாக்கும், மூச்சு பயிற்சிகளும் சேர்த்து செய்யும் போது, அவர்களுக்கு பிரசவ வலியை தாங்கக்கூடிய வலிமையை கொடுக்கும். அதனால் தான் உடற்பயிற்சிகள் செய்ய சொல்கிறார்கள். 

உடற்பயிற்சிகள் எப்படி செய்ய வேண்டும்..? 

உடற்பயிற்சி செய்தால் சுகப்பிரசவம் ஆகுமா

நாம் மற்ற நேரங்களில் செய்யும் உடற்பயிற்சிகள் போல் இல்லாமல், கர்ப்ப காலத்தில் செய்யும் உடற்பயிற்சிகளுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் செய்யும் உடற்பயிற்சிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாறுபடும்.

கர்ப்பகாலத்தின் போது ஒரு பெண் அவளின் உடல்நிலையை பொறுத்து உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். மேலும் உடற்பயிற்சிகள் செய்யும் நேரம் அவரவர்களின் உடல்நிலையை பொறுத்து மாறுபடும். அதுபோல மிகவும் சோர்வடையும் அளவிற்கு உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement