முட்டை சைவமா அசைவமா..? உண்மையான அறிவியல் காரணம் என்ன..?

Advertisement

முட்டை சைவமா அசைவமா | Egg Veg or Non Veg in Tamil

ஹலோ மக்களே..! இந்த பதிவில் நீண்ட நாட்களாக இதற்கான பதிலை தான் நாம் தேடிக்கொண்டு இருக்கிறோம். அப்படி என்ன தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று கேள்வி இருக்கும். சிலருக்கு தெரியும் சிலருக்கு தெரியாது. அது என்னவென்றால் கோழி முட்டை சைவமா அசைவமா என்பது தான்.   பொதுவாக இந்த கேள்வி அனைவருக்கும்  உள்ளது தான். சிலர் இதனை அசைவம் என்று நினைத்துக்கொண்டு அதனை சாப்பிடாமல் ஒதுக்கி விடுவார்கள். ஆனால் இது உண்மையாவே சைவம் என்று சிலர் சாப்பிடுகிறார்கள். முட்டை உடலுக்கு பல நன்மைகளை தர கூடிய உணவு ஆகும். ஆகவே இந்த பதிவின் வாயிலாக முட்டை சைவமா..? அசைவமா என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Egg Veg or Non Veg in Tamil:

முட்டை சைவம் என்று சிலர் சொல்வார்கள். சிலர் இதை ஒப்புக் கொள்கிறார்கள். சிலர் இதனை அவமதிக்கிறார்கள். ஏன் சைவம் என்று ஒப்புக்கொள்கிறார்கள் என்றால் சைவம் என்றால் அதில் சதை அல்லது உயிர் கொன்றால் மட்டுமே அது அசைவம் ஆகும். ஆனால் இதுபோன்ற ஒன்றும் அதில் இல்லை. ஆகவே அது சைவம்  ஆகும்.

சிலர் இதை சொல்வார்கள் கோழியிலிருந்து தான் முட்டை வருகிறது. ஆனால் கோழியை கொன்று அதிலிருந்து வருவதில்லை அல்லவா..? மிருகங்களிலிருந்து கிடைக்கும் பொருட்கள் அசைவம் என்றால் மாட்டிடம் இருந்து தான் பால் கிடைக்கறது. ஆனால் அதை பூஜைக்கு பயன்படுத்துவது இல்லையா..? அது போல் தான் இதுவும்.

முட்டையுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் ஏன் தெரியுமா சாப்பிடக்கூடாது

முட்டை சைவம் தான்:

முட்டையின் வெள்ளைக்கருவில் புரதசத்துக்கள் நிறைய உள்ளது. ஆனால் இதில் விலங்கு செல்கள் என்பது சிறிதளவு கூட கிடையாது. ஆகவே முட்டையின் வெள்ளைக்கரு சைவம் என்று அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.

ஆனால் மஞ்சள் கருவியில் கொழுப்பு, புரதம் இரண்டும் சேர்ந்து காணப்படுகிறது. அதேபோல் கியூம செல்களை காணப்படும். இதனை மஞ்சள் கருவில் இருந்து பிரித்து எடுக்க முடியாது. ஆகவே மஞ்சள் கரு ஒரு அசைவம் ஆகும்.

பச்சை முட்டை குடிப்பது நல்லதா கெட்டதா

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement