காகத்தின் அருமை அறியாத மக்கள்..! Facts About Crow in Tamil..!
பொதுவாக உங்களுக்கு பிடித்த பறவை எதுவென்று கேட்டால் கிளி, குயில், மயில் என்று பலரும் சொல்வார்கள். ஆனால் காகத்தை மட்டும் யாரும் பிடிக்கும் என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் காகம் கருப்பாக இருக்கும். கருமை நிறத்தை கண்டு அலட்சியம்படுத்தும் மனிதர்களுக்கு காகத்தை பற்றி அறியாத நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மனிதனைவிட வாழ்வில் உயர்ந்த நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை காகம் என்றும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை! சரி இன்றைய பதிவில் நாம் காகத்தை பற்றி அறியாத பல ரகசியங்களை இங்கு படித்தறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பூச்சியின் இரத்தத்தில் இருந்து லிப்ஸ்டிக் தயாரிக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா?
காகம் பற்றிய தகவல்கள் – Facts About Crow in Tamil:
உலகிலேயே மிக சுத்தமான பறவையினம் எதுவென்றால் காகத்தை சொல்லலாம். ஆம் நண்பர்களே காகம் பெரும்பாலும் மாலை நேரங்களில் ஏதாவது குட்டை, குளம், ஆறு போன்ற நீர் நிலைகளில் குளித்துவிட்டு தான் அதனுடைய கூட்டிற்கு செல்லுமாம்.
காகம் ஒரு உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை! அதாவது கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். அது ஆண் காகமாக இருந்தாலும் சரி, பெண் காகமாக இருந்தாலும் சரி தனது ஜோடியுடன் மட்டுமே இனம் சேறுமாம்.
காகா ஒரு புத்திசாலி என்று சொல்லலாம், நீங்கள் காகத்திற்கு என்றாவது ஒரு நாள் உணவளித்தீர்கள் என்றால் உங்களுடைய முகத்தை அது மறக்கவே மறக்காதாம். நாய்களைவிட அதிக ஞாபக சக்தி கொண்ட பறவை காகம் ஆகும்.
காகத்திற்கு சுயநலம் என்பது என்னவென்றே தெரியாதாம் ஒரு காக்காவிற்கு ஒரு இடத்தில உணவு கிடைத்தது என்றால் காகா என்று கத்தி சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லா காக்காவையும் கூப்டு சாப்பிடவைக்கும் குணம் காகத்திற்கு மட்டும் தான் உள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தயிருடன் எதை சேர்த்து சாப்பிட்டால் இறப்பதற்கு வாய்ப்புள்ளதா!!!
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |