தங்கத்தின் தரத்தை பொறுத்து ஏன் அதனின் விலை மாறுபாடுகிறது தெரியுமா..!

Advertisement

Facts About Gold in Tamil

பொதுவாக நமது பதிவின் மூலம் தினமும் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மற்றும் மிகவும் பயனுள்ள தகவல்களை தெரிந்துக் கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மற்றும் மிகவும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் தங்கத்தின் தரத்தை பொறுத்து ஏன் அதனின் விலை மாறுபடுகிறது என்பது பற்றி தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> 1 பவுன் தங்கம் எத்தனை கிராம் என்று தெரியுமா

Facts About Gold in Tamil:

Facts About Gold in Tamil

அரசன் ஆனாலும், ஆண்டி ஆனாலும் கடுகளவாவது தங்கம் நிச்சயம் நம்மிடம் இருக்கும். ஏனென்றால் தங்கமானது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஓர் அங்கமாக மாறிவிட்டது.

நம்மை அலங்கரிக்கும், ஜொலிக்கும் தங்க ஆபரணம் இல்லாமல் எந்த ஒரு விசேஷமும் முழுமையடையாததாக இருக்கிறது. எத்தனையோ புதிய ஆபரணங்கள் வந்திருந்தாலும் தங்கத்தின் தங்கம் மீதான மதிப்பும் மோகமும் நம்மிடையே குறைவதில்லை.

இதையும் படித்துப்பாருங்கள்=> நெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் வைப்பதில் இப்படி ஒரு அறிவியல் காரணம் இருக்கிறதா

அந்த அளவுக்கு தனிப்பட்ட முறையில் நமது செல்வநிலையை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது தங்கம். அப்படிபட்ட தங்கத்தின் தரத்தை பொறுத்து ஏன் அதனின் விலை மாறுபடுகிறது என்று பார்க்கலாம்.

Facts About Gold in Tamil:

பொதுவாக நாம் தங்கம் வாங்க நகை கடைக்கு சென்றால் அங்கு நான்கு விதமான தங்கம் இருக்கும். அதாவது 24 கேரட், 22 கேரட், 18 கேரட் மற்றும் 14 கேரட் என பிரித்து வைத்திருப்பார்கள்.

இவை நான்குமே தங்கம் தான் அதனின் தரத்தை பொறுத்து மாறுபடும். அதாவது 24 கேரட் தங்கம் தான் மிகவும் தரமான தங்கம். அதனால் தான் இதனை 99.9% தரமான தங்கம் என்று கூறுவார்கள்.

எனவே மற்ற தங்கத்தை விட இதனின் விலை உயர்வாக இருக்கும். ஆனால் இதனை பயன்படுத்தி எந்த ஒரு ஆபரணங்களும் தயாரிக்க முடியாது. ஏனென்றால் 24 கேரட் தங்கமானது மிகவும் மென்மையானது.

இதனை நாம் வாயில் வைத்து நமது பல்லை பயன்படுத்தி சிறிதளவு அழுத்தம் கொடுத்தாலும் அதனின் வடிவமைப்பு மாறிவிடும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> கோவிலில் மணி அடிப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா

ஆனால் 22 கேரட், 18 கேரட் மற்றும் 14 கேரட் தங்கத்தை பயன்படுத்தி ஆபரணங்கள் தயாரிக்க முடியும். இதற்கு காரணம் 22 கேரட் தங்கத்தில் 92% தங்கம் இருக்கும் மீதமுள்ள 8% மற்ற வெள்ளி, செப்பு போன்ற மற்ற உலோகங்கள் கலந்திருக்கும்.

அதேபோல் 18 கேரட் தங்கத்தில் 75% தங்கம் இருக்கும் மீதமுள்ள 25% மற்ற உலோகங்கள் கலந்திருக்கும். 14 கேரட் தங்கத்தில் 58% தங்கம் இருக்கும் மீதமுள்ள 42% மற்ற உலோகங்கள் கலந்திருக்கும்.

எனவே இவற்றின் விலையும் மாறுபடுகின்றன. அதாவது எந்த அளவிற்கு இவற்றில் மற்ற உலோகங்கள் கலந்துள்ளனவோ அந்த அளவிற்கு அதனை விலையும் தரமும் மாறுபடுகிறது.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts

 

Advertisement