ஆண்களுக்கு நடு மண்டைல மட்டும் ஏன் சொட்டை விழுது தெரியுமா?

Advertisement

ஆண்களுக்கு நடு மண்டைல மட்டும் ஏன் சொட்டை விழுது தெரியுமா? – Hair Loss Reasons for Male Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆண்களுக்கு முடி சொட்டை விழுவதற்கான காரணங்கள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை தான் தலை முடி பிரச்சனை. இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் தலை முடி சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் பலர் இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறதா, இதனால் தலைமுடியின் ஆயுள் குறைந்துவிடுகிறது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம் மற்றும் ஆண்களுக்கு நடு மண்டையில் மட்டும் ஏன் சொட்டை விழுகிறது? ஏன் சைடு மண்டையில், பின் மண்டையில் சொட்டை விழுவதில்லை என்று இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

சொட்டை விழ காரணம் – Hair Loss Reasons for Male Tamil:

hair loss reasons for male

  • ஆண்களுக்கு முக்கியமாக சொட்டை விழுவதற்கு என்ன காரணம் என்றால் Dihydrotestosterone என்கின்ற ஹார்மோன் ஆகும். இந்த Dihydrotestosterone ஹார்மோன் என்பது நமது உடலில் உள்ள Testosterone ஹார்மோன்களில் நிகழும் ஒருசில செயல்களினால் உற்பத்தியாகிறது.
  • இதுமட்டும் இல்லாமல் இந்த DHT எனப்படும் Dihydrotestosterone ஹார்மோன் நமது உடலில் எங்கெல்லாம் உற்பத்தியாகிறது என்றால், நமது ஸ்கின், முடி, Follicle போன்ற இடங்களில் தான் உற்பத்தியாகிறது.
  • பொதுவாக ஆண்களுக்கு 14 வயது முதல் 16 வயதில் தான் இந்த Dihydrotestosterone ஹார்மோன் உற்பத்தியாரது. இதன் காரணமாக தான் ஆண்களுக்கு டீன் ஏஜ் வயதில் மீசை தாடி வளர்கிறது.
  • என்ன தான் இந்த Dihydrotestosterone ஹார்மோன் ஆண்களுக்கு அழகான மீசை மற்றும் தாடியை கொடுத்தாலும். அதே DHT ஹார்மோன்தான் ஆண்களுக்கு தலையில் சொட்டை விழுவதற்கு காரணமாக இருக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலை துண்டிக்கப்பட்ட பிறகும் ஒரு வாரம் உயிருடன் இருக்கும் கரப்பான் பூச்சி!! ஏன் தெரியுமா?

அது ஏன் என்றால்? 

  • சில ஆண்களுக்கு.. 25 அல்லது 30 இது போன்ற குறிப்பிட்ட வயதுக்கு பிறகு Testosterone ஹார்மோன் அதிகமாக சுரந்து, அது Dihydrotestosterone ஹார்மோனாக கன்வெட் ஆகுமாம். இவ்வாறு அதிகமாக உற்பத்தியாகும் இந்த DHT. சிலரது தலையில் முடி வளர செய்யும் Hair Follicles-ஐ சுருங்க செய்யுமாம், பின் அவற்றில் இருக்கும் முடிகள் கொட்ட ஆரம்பிக்குமாம், பின் நாளைடைவில் Hair Follicles-ஐ சுத்தமாக மூடி, அந்த இடத்தில் மீண்டும் முடியை வர செய்யாதாம். இருப்பினும் இந்த பிராசஸ் மெதுவாகத்தான் நடக்கும்.
  • இது எப்படி நடக்கும் அப்படினா Temples என்று அளிக்கக்கூடிய முன் நெற்றியில் முடி கொட்ட ஆரம்பிக்கும், அதன் பிறகு மண்டையின் நடு பகுதியில் வட்ட வடிவில் முடி கொட்ட ஆரம்பிக்கும். பிறகு தலை சொட்டையாக மாறிவிடும்.

வழுக்கை விழுவதற்கு என்ன காரணம்? – Hair Loss Reasons for Male Tamil

  • அப்பா, தாத்தா என்று அனைவர்க்கும் பரம்பரை பரம்பரையாக இந்த பிரச்சனை இருந்திருந்தால் உங்களுக்கும் வழுக்கை விழும்.
  • மேலும் அதிக ஸ்ட்ரெஸ் நமக்கு இருந்தால் கூட Testosterone ஹார்மோன் அதிகமாக Dihydrotestosterone ஹார்மோனாக கன்வெட் ஆகலாம் என்று சொல்ராங்க இதன் காரணமாகவும் முடி கொட்டும்.

ஆண்களுக்கு நடு மண்டைல மட்டும் ஏன் சொட்டை விழுது தெரியுமா?

  • நமது உடலில் பொதுவாக Aponeurosis என்பதும் டிஷ்யூ பரவலாக இருக்கும். இந்த டிஷ்யூ உடலில் இரண்டு வகையா மசில்ஸை இணைப்பதற்கு உதவி செய்கிறது. அவற்றில் ஒரு டிஷ்யூ நமது தலையின் மேல் பகுதியில் இருக்கும்.
  • அவற்றை Galea என்பார்கள் இது தலையில் உள்ள தோலிற்கு கீழ் புறமும் இருக்கும். இந்த Galea மற்ற மசில்ஸ்சுடன் இணைந்து இருப்பதினால், அந்த மசில்ஸ் எல்லாம் நகர நகர தலையில் உள்ள Galea-னும்  அங்கங்கே இழுக்கப்படும். இதன் காரணமாக அந்த Galea-க்கு அதிக டென்ஷன் உருவாகும். இதனால் தலையில் உள்ள ஸ்கினில் ஒரு வீக்கத்தை ஏற்படும், இந்த வீக்கம் மிகவும் சிறிய அளவில் தான் இருக்கும். ஆனால் அது ரொம்ப நாட்களுக்கு இருக்குமாம்.
  • ஆக இந்த வீக்கம் தலை பகுதியில் Testosterone ஹார்மோனை, Dihydrotestosterone ஹார்மோனாக கன்வெட் செய்யும். இவ்வாறு அதிகமாக கன்வெட் ஆகும் Dihydrotestosterone ஹார்மோன் என்ன செய்யும் என்றால், நாம் முதலில் சொன்னது போல் Hair Follicles-ஐ சுருங்க செய்யுமாம், பின் அவற்றில் இருக்கும் முடிகள் கொட்ட ஆரம்பிக்குமாம், பின் நாளைடைவில் Hair Follicles-ஐ சுத்தமாக மூடி, அந்த இடத்தில் மீண்டும் முடியை வர செய்யாது.
  • இந்த செயல்கள் தலையின் நடுப்பகுதியில் மட்டுமே நடக்கிறது, மற்றபடி தலையின் பின் பகுதி மற்றும் டைடு பகுதியில் நடப்பதில். இதன் காரணமாகத்தான் அங்கெல்லாம் முடி கொட்டுவது இல்லை.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
புளியமரத்தை சாலை ஓரங்களில் வளர்பதற்கு காரணம் என்ன..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement