ரயில் தண்டவாளத்தில் பீரோல் மாதிரியான பாக்ஸ் வைப்பது ஏன் தெரியுமா?

Advertisement

ரயில் தண்டவாளத்தில் பீரோல் மாதிரியான பாக்ஸ் வைப்பது ஏன் தெரியுமா? How Axle Counter Works in Tamil

How Axle Counter Works in Tamil – உலகிலேயே இந்திய ரயில்வே 4-வது மிகபெரிய நெட்வொர்க்காக செயல்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் அதிக பயணிகள் பயனுக்கும் ஒரே போக்குவரத்துக்கு எதுவென்றால் அதனை ரயில் போக்குவரத்துக்கு என்றும் சொல்லலாம்.  இந்தியாவில் ஒரு நாளுக்கு 4 கோடி மக்கள் ரயிலில் தான் பயணம் செய்கின்றன இதற்கு என்ன காரணம் என்றால் ரயில் பயணம் மிகவும் சொகுசாக இருக்கும், டிக்கெட் விளையும் குறைவு தான். இதன் காரணமாக தான் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றன. இத்தகைய ரயில் பயணத்தின் போது தண்டவாளத்தின் அருகே அங்கங்கே அலுமினியத்தில் சிறு சிறு பீரோல் இருக்கும் ஆல்வா அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? செய்கிறது அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ரயில் தண்டவாளத்தில் பீரோல் மாதிரியான பாக்ஸ் வைப்பது ஏன் தெரியுமா?railway electrical junction box

ரயில் தண்டவாளத்தின் அருகே சிறு சிரு பீரோல் போன்ற அலுமினியம் பெட்டிகள் ரயிலில் பயணம் செய்யும் அனைவரது உயிரை காக்கும் பணியை தான் செய்கிறது. அப்படி என்ன பணி செய்கிறது என்று யோசிக்கிறீங்களா.. அப்படின்னா பதிவை தொடர்ந்து படியுங்கள்..

பீரோல் போன்ற அலுமினியம் பெட்டி Electrical Junction Box என்று அழைக்கப்படுகிறது. இந்த Electrical Junction பெட்டி ரயில் தண்டவாளத்தின் இருக்கே ஒவ்வொரு 3 முதல் 5 கிலோ மீட்டருக்கு ஒன்று பொருந்தப்பட்டிருக்கும்.

 இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நாம் சுற்றும் போது தன்னை அறியாமல் கீழே விழ காரணம் என்ன தெரியுமா..?

இதனுடைய பணிகள் என்னவென்றால், ரயில் பெட்டிகளை எண்ணுவது தான் அதனுடைய வேலையாகும். எப்படி ரயில் பெட்டிகளை எண்ணுகிறது என்றால், ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயில் வண்டி 15 பெட்டிகளுடன் செல்கிறது என்று நாம் வைத்துக்கொள்வோம். அவ்வாறு செல்லும் போது ஏதாவது ஒரு பெட்டி கழன்று விழுகிறதா என்பதை கண்காணிக்கும் கருவிதான் இந்த Electrical Junction Box.

எப்படி கண்காணிக்கிறது என்றால் இந்த Electrical Junction Box-யில் இருந்து ஒரு வயர் தண்டவாளது நோக்கி வரும், அந்த வயருக்கென தண்டவாளத்தில் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதனை ஆக்ஸில் கவுண்டர் பெட்டி என்று அழைப்பார்கள.axle counter box

ரயில்வே தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஆக்ஸில் கவுண்டர் பெட்டி ரயில் அந்த வழியாக செல்லும்போது ரயில் சக்கரம் அதில் அழுத்தி அந்த கருவி அமுங்கும். இவ்வாறு எத்தனை முறை அழுத்துகிறது என்பதை அந்த அலுமினியம் பெட்டி கணக்கெடுக்கும். இதன் மூலம் ஒரு ரயில் வண்டியின் முழுப்பெட்டிகளை கணக்கெடுக்கும்.

இவ்வாறு கணக்கெடுக்கப்ட்ட ரயில் குறிப்பிட்ட Electrical Junction Box இருக்கும் பகுதிக்கு வருவதற்கு முன்னரே முந்தைய Electrical Junction Box-யில் எதனை சக்கரங்கள் கணக்கிடப்பட்ட்டது என்ற எண்ணிக்கையை இந்த பெட்டிக்கு அனுப்பிவிடும். How Axle Counter Works in Tamil

ஆக முந்தைய Electrical Junction Box அனுப்பிய தகவலை விட தற்போது பதிவான தகவல் குறைவாக இருந்தால் இடையில் ஏதே பெட்டி கழன்றுள்ளது என்று அர்த்தம். உடனடியாக இந்த ஆக்ஸில் கவுண்டர் அருகில் இருக்கும் சிக்னல் கண்ரோல் நிலையத்திற்கு தகவலை தெரிவிக்கும்.

ஆக இந்த தகவலை வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை எடுக்க தொடங்குவார்கள். ஒருவேளை விபத்தே நிகழ்ந்துவிட்டாலும் அது குறித்த விசாரணை நடுத்த இந்த தகவல் உதவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இறந்தவர்களின் மூக்கில் ஏன் பஞ்சு வைக்கிறார்கள் என்று தெரியுமா..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement