ஆலங்கட்டி மழை எப்படி உருவாகிறது தெரியுமா?

How Hailstorm is Formed in Tamil

ஆலங்கட்டி மழை எப்படி உருவாகிறது தெரியுமா? | How Hailstorm is Formed in Tamil

வணக்கம் நண்பர்களே சாதரண மழை போலவே சில சமயங்களில் வானில் ஐஸ் கட்டி மழை பெய்யும். அதனை ஆலங்கட்டி மழை என்று அழைப்பார்கள். இந்த ஆலங்கட்டி மழை எப்படி உருவாகிறது என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க இந்த ஆலங்கட்டி மழை ஏற்பாடு உருவாகிறது என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம்.

ஆலங்கட்டி மழை எப்படி உருவாகிறது எப்படி? | Alangatti Mazhai Reason:

இந்த ஆலங்கட்டி மலை உருவாக்குவதற்கு நிறைய விதிமுறைகள் உள்ளதாம். அது என்னவென்றால் சாதரணமாக மழை பெய்யும் போது, மேகங்கள் எல்லாம் கூடி அதிலில் நீர் துளிகள் இருக்கும். ஆனால் இந்த ஆலங்கட்டி மழை பொறுத்தவரை மேகத்தின் கீழ் நீர் துளிகளும், மேகத்தின் மேல் பகுதி என்பது மைனஸ் 10 டிகிரி அளவுக்கு குளிர நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் இந்த ஆலங்கட்டி மழை என்பது உருவாக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

மேலும் மேல்நோக்கி எழும் காற்றானது அதாவது Updraft என்பது இருக்கும் போது மேகத்தின் கீழ் பகுதியில் இருக்கக்கூடிய நீர் துளிகள் மேல் எழும்பும். இவ்வாறு நீர் துளிகள் மேல் எழும்பும் போது அது பனிக்கட்டியாக மாறும்.

இவ்வாறு இந்த Process தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். அதாவது இந்த நீர்துளிகளை காற்று மேல் நோக்கி இழுத்துக்கொண்டே இருந்து நீரை ஐஸ் கட்டியாக மாற்றிக்கொண்டே இருக்கும். பனிக்கட்டியின் அளவு அதிகமாக அதிகமாக அதனுடைய எடையும் அதிகமாகும், ஒரு கட்டத்தில் இந்த ஐஸ் கட்டியின் எடை அதிகமானதால் பூமியை நோக்கி வரும். இவ்வாறு வருவதை தான் நாம் ஆலங்கட்டி மழை என்று சொல்கிறோம்.

பொதுவாக இந்த ஆலங்கட்டி மழை என்பது குளிர்காலத்தில் தான் நிகழும். இந்த ஆலங்கட்டி மழை உலகில் அணைத்து இடங்களிலும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தயிருடன் எதை சேர்த்து சாப்பிட்டால் இறப்பதற்கு வாய்ப்புள்ளதா!!!

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts