How Ships Float In Sea Tamil
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் எங்கள் பொதுநலம்.காம் பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடலில் கப்பல் எப்படி மூழ்காமல் மிதக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவை படித்து அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!
கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..? |
கப்பல் எப்படி மிதக்கிறது..?
நம் அனைவருக்குமே இருக்க கூடிய கேள்வி தான் இது. நாம் ஒரு சிறிய எடை கொண்ட கல்லை கடலில் தூக்கி போட்டால் கூட அது மூழ்கிவிடும். ஆனால் பலமடங்கு எடை கொண்ட கப்பல் எப்படி கடலில் மூழ்காமல் மிதக்கிறது என்று பலரும் யோசித்திருப்பீர்கள்.
ஏன் படகு கூட தண்ணீரில் மூழ்காமல் தான் மிதக்கிறது. படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்வீர்கள். ஆனால் மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் தான் செய்யப்படுகின்றன. ஆனால் கப்பல்கள் ஏன் மூழ்கவில்லை.
காரணம், கப்பல் தண்ணீரில் இருக்கும் போது கப்பலின் அடிப்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான அளவு தண்ணீர் அந்த இடத்தில் இருக்கும்.
அப்போது தான் 1000 மடங்கு எடையுள்ள கப்பலின் உடற்பகுதி அதே அளவு எடையுள்ள தண்ணீரை இடம் பெயரச் செய்கிறது. இது ஒரு கப்பலின் வெளியேற்றும் திறன் என்று சொல்லப்படுகிறது.
தண்ணீரில் இருக்கும் கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே காணப்படும் அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் கப்பலின் எடையும் தண்ணீரில் அழுத்தம் கொடுக்கிறது.
கடலில் மிதக்கும் அளவிற்கு சமநிலையை ஏற்படுத்தும் வகையில் தான் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களே கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அதாவது, தண்ணீரும் கப்பலும் சமமான நிலையில் அழுத்தங்களை உருவாக்குகின்றன. இந்த சமமான அழுத்தங்களின் காரணமாக தான் கப்பல் நீரில் மிதக்கிறது.
அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல்கள் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அதுபோல, கப்பலின் உட்பகுதியில் ஒரு குறிப்பிட்ட அளவு காற்று இருக்கிறது. ஒவ்வொரு கப்பலிலும் அதற்கான கொள்ளளவு கட்டாயம் இருக்கும். அந்த கொள்ளளவை மீறி கப்பலில் பொருட்கள் நிரப்பப்பட்டால் கப்பல் தண்ணீரில் மூழ்கிவிடும்.
சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா.. சொகுசு கப்பலின் சிறப்பம்சங்கள் என்னென்ன? |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |