கேஸ் சிலிண்டர்ல இனி இந்த நம்பரை செக் பண்ணாமல் வாங்கிடாதீங்க..! How to Check Expiry Date for Cylinder in Tamil..!
இப்பொழுது கேஸ் அடுப்பு இல்லாத வீடுகளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலோனர் வீடுகளில் கேஸ் அடுப்பை தான் சமைப்பதற்கு பயன்படுத்துகின்றன. அப்படி கேஸ் அடுப்பை அதிகம் பயன்படுத்துபவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது கேஸ் சிலிண்டரில் A-21, B-13, C-22, D-11 என்று எண்கள் இருக்கும் அந்த எண்கள் எதற்கு குறிப்பிடுகின்றன என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரிந்து என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
சிலிண்டரில் A-21, B-13, C-22, D-11 என்று எண்கள் குறிப்பிடுவது ஏன்? | How to Check Expiry Date for Cylinder in Tamil
சிலிண்டரில் A-21, B-13, C-22, D-11 என்று எண்கள் குறிப்பிடப்படுவது ஏன் என்றால். இதனை நீங்கள் கட்டாயம் பார்த்து வாங்க வேண்டிய சிலிண்டருடைய Due Date ஆகும்.
இந்த Due Date என்பது என்னவென்றால் ஒரு சிலிண்டருடைய சராசரி ஆயுட்காலம் 15 வருடங்கள் ஆகும். இருந்தாலும் கேஸ் சிலிண்டரின் கண்டிஷன் நன்றாக இருக்கிறதா என்று ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை செக் செய்வார்கள்.
அந்த செக் செய்ய வேண்டிய Due Date-ஐ தான் சிலிண்டரில் குறிப்பிட்டிருப்பார்கள். ஒருவேளை அந்த Date-ஐ தாண்டிய கேஸ் சிலிண்டர் உங்களிடம் வந்தால், அந்த கேஸ் சிலிண்டரை நீங்கள் திரும்ப அனுப்பிவிடலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கிணற்றை எட்டி பார்க்க கூடாது என்று சொல்வதற்கு பின் உள்ள அறிவியல் காரணம் என்ன தெரியுமா..?
அதனை எப்படி அறிவது?
உதாரணத்திற்கு மேல் படத்தில் காட்டப்பட்டுள்ள எண்ணை பார்க்கவும் அவற்றில் D-21 என்று இருக்கிறது அல்லவா அது தான் சிலிண்டரின் Due Date ஆகும். இவற்றில் 21 என்பது வருடம் ஆகும் அதாவது 2021 ஆகும். D என்பது மாதம் ஆகும்.
மாதத்தை பொறுத்தவரை நான்கு வகைகள் மட்டுமே உள்ளது. ABCD என்று நான்கு வகைகளில் மாதங்களை பிரித்திருப்பார்கள்.
- A என்பது ஜனவரி முதல் மார்ச் மாதத்தை குறிக்கும்.
- B என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள மாதத்தை குறிக்கும்.
- C என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரை உள்ள மாதத்தை குறிக்கும்.
- D என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள மாதத்தை குறிக்கும்.
ஆக D-21 என்பது 2021 டிசம்பர் மாதத்தை குறிக்கிறது. ஆக 2021 டிசம்பர் மாதத்துக்குள் அந்த சிலிண்டரை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் அர்த்தமாகும். இப்படி தான் நீங்கள் சிலிண்டரை செக் செய்து வாங்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஏன் எல்லா வண்டி டயரும் கருப்பாக இருக்கிறது என்று தெரியுமா.?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |