How To Keep Your Dog From Peeing On Car Tires in Tamil
நாய்கள் நன்றியுள்ளது என்று அனைவருக்கும் தெரியும். பெரும்பாலும் நாய்களை வீட்டில் அவர்களுடைய பிள்ளைகளை போல் வளர்ப்பார்கள். அந்த நாய்கள் கட்டிப்போட்டாலும் அது சிறுநீர் கழிக்க வெளியில் செல்லும் போது அது ஏதாவது ஒரு கம்பம், அதேபோல் கார், பைக் டயர் மீது தான் சிறுநீர் கழிக்கும். இதற்கு ஏதாவது காரணம் உள்ளதா என்று கேள்விகள் நமக்கு இருக்கும். அதேபோல் மனிதர்களை போல் நாய்களுக்கும் ஏதாவது அடையாளம் இருக்குமோ என்று கேள்விகள் இருக்கும். ஆகவே அதனை பற்றி பார்க்கலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Keep Your Dog From Peeing On Car Tires in Tamil:
நாம் வெளியில் செல்லும் போது பார்த்திருப்போம். நாய்கள் கம்பம், கார் டயர் மீது சிறுநீர் கழிப்பதை பார்த்திருப்போம். ஆகவே அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம் வாங்க..! நாய்களின் இந்த நடத்தை குறித்து நாய் நிபுணர்கள் மிகவும் முழுமையான ஆய்வு ஒன்றை செய்துள்ளனர். அதற்கு 3 காரணங்கள் உள்ளது. அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
காரணம்: 1
கம்பத்திலோ அல்லது கார் டயரிலோ சிறுநீர் கழிப்பதன் மூலம் நாய்கள் தங்கள் ஏரியாவை முடிவு செய்கிறது. அதாவது இது என்னுடைய இடம் என்று சிறுநீர் மூலம் குறிக்கின்றன. இது மற்ற நண்பர்களை தொடர்பு கொள்ளவதற்கு உதவி செய்கிறது. அது எப்படி என்று கேட்பீர்கள். அந்த நாய்கள் கம்பத்தில் அல்லது தூண் அல்லது அந்த டயரில் உள்ள சிறுநீர் வாசனையை கண்டறியும் மற்ற நாய்கள் அதனை வைத்து நண்பர்களை கண்டறியும்.
காரணம்: 2
நாய்கள் நடைபாதையில் சிறுநீர் கழிப்பதை விட செங்குத்து பரப்புகளில் சிறுநீர் கழிப்பதை விரும்புகின்றன. டயர் மற்றும் கம்பத்தின் கீழ் பகுதியில் நாயின் மூக்கு எட்டும் தூரத்தில் மட்டுமே நாய்கள் சிறுநீர் கழிக்கும்.
காரணம்: 3
நாய்கள் டயர் என்பதை விட ரப்பர் டயர் என்பது தான் பிடிக்கும். அந்த வாசனை என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் டயர் வாசனையை அறிந்து, அதன் அருகே சென்று சிறுநீர் கழிக்கிறது. இதற்கு இது தான் காரணம் ஆகும்.
வாகனங்களில் போகும் பொழுது நாய்கள் துரத்துவதற்கான காரணம் என்ன தெரியுமா
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |