கீழே விழுந்து வணங்குவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

காலில் விழுந்து வணங்குவது

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்..? பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் எங்கள் பொதுநலம்.காம் பதிவை படித்து பயன்பெறுங்கள். நம் சிறு வயதிலிருந்தே நம் பெற்றோர்கள் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்கள். கோவிலுக்கு சென்றாலும் கீழே விழுந்து வணங்குவோம். ஏன் நம் முன்னோர்கள் கீழே விழுந்து வணங்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கான காரணத்தை என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் காலில் விழுந்து வணங்குவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கோவிலில் மணி அடிப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?

காலில் விழுந்து வணங்குவதற்கு காரணம் என்ன..? 

கோவிலில் கீழே விழுந்து வணங்குவதற்கு காரணம் என்ன

காலில் விழுந்து வணங்குவது என்பது நம் தமிழ் நாட்டின் கலாச்சாரமாக இருக்கிறது. காலில் விழுந்து வணங்குவது தனித்துவம் வாய்ந்த தமிழ்  கலாச்சாரங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்திய கலாச்சாரத்தின் படி பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவது என்பது அவர்கள் மீது இருக்கும் மரியாதையின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. ஆனால் கீழே விழுந்து வணங்குவதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மனித உடல் என்பது தசை, எலும்பு மற்றும் நரம்பு என்ற உறுப்புகளால் ஆனது. நம் உடல் தான் நம்மை இயங்க வைக்கும் சக்தியை கொண்டுள்ளது. நம் உடலில் இருக்கும் இந்த சக்தி தான் உடல் செயல்பட உதவுகிறது.

 நம் பாதங்களில் அதிகமான சக்தி ஓட்டம் இருக்கிறது என்று அறிவியல் ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கும் போது அந்த சக்தியை நம்மால் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது .

அதனால் தான் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

கோவிலில் கீழே விழுந்து வணங்குவதற்கு காரணம் என்ன..? 

 The scientific reason for prostration in tamil

அதேபோல கோவிலில் கீழே விழுந்து வணங்குவதற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது.

நாம் கோவில்களுக்கு செல்லும் போது பார்த்திருப்போம். கோவிலில் சாமி கும்பிடும் போது ஆண்கள் படுத்தும் பெண்கள் மண்டியிட்டும் வணங்குவார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..?

 பெண்கள் ஆண்களை போல் படுத்து வணங்க கூடாது. பெண்களின் கருப்பை பூமியில் படகூடாது. காரணம் பூமியில் இருந்து வெளிவரும் வெப்பமானது பெண்களின் கருப்பையை பாதிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.  

அதனால் தான் பெண்கள் ஆண்களை போல் படுத்து வணங்காமல் மண்டியிட்டு வணங்குகிறார்கள்.

அதுபோல  ஆண்கள் படுத்து வணங்கும் போது பூமியில் இருந்து வெளிப்படும் ஆற்றலானது அவர்களின் 5 புலன்களின் செயல்பாட்டையும் அதிகரிக்க செய்கிறது.  

இதன் காரணமாக தான் ஆண்கள் படுத்தும், பெண்கள் மண்டியிட்டும் வணங்குகிறார்கள்.

உணவு முறைக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் என்ன..? 

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement