மடையன் என்பது திட்டும் வார்த்தை அல்ல அதன் உண்மையான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!

Madayan Meaning in Tamil

நாம் பயன்படுத்தும் பல வார்த்தைகளுக்கான முழுஅர்த்தங்கள் நமக்கு தெரிவதில்லை. நாம் கிண்டலாக மற்றவர்களை திட்டுவதற்கு பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு கூட நமக்கு அர்த்தம் தெரியாது. அந்தவகையில் நாம் மற்றவர்களை திட்டுவதற்கு பயன்படுத்தும் ஒரு வார்த்தையான மடையன் என்பதின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா.?

மடையன் என்பது மற்றவர்களை திட்டுவதற்கு பயன்படுத்தும் ஒரு சொல் அல்ல. அது ஒரு வீரச்செயலை குறிக்கும் சொல்லாகும். அது என்ன வீரச்செயல் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Madayan Meaning in Tamil:

Madaya in tamil

ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் சரியான நேரங்களில் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் “மடை”.

மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் தான் பயன்படுத்தப்பட்டன. அதிலும் வைரம் பாய்ந்த கட்டை என்று கூறப்படும் மரங்களை தேர்வு செய்து அதனுடைய உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும்.

பின்னர் அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உட்பகுதியில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.

வெள்ளம் ஏற்படும் காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விஷயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.

இதையும் படியுங்கள்=> ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்பதன் உண்மையான அர்த்தம் தெரியுமா

Madayan Meaning in Tamil:

Madaiya meaning in tamil

மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார்.

மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். அப்படி மடை திறக்கப்படும் ஏரி அல்லது கண்மாயில் இருந்து ஓடை வழியாக விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ந்து செல்லும்.

மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம். மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது என்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடமும் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள்.

மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள் தான் “மடையர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.

இனி யாரையாவது மடையா என்று திட்டும் முன் யோசியுங்கள்..!!!!
உங்களை யாராவது மடையன் என்று சொன்னால் காலரை உயர்த்தி நான்தான் எனக் கூறுங்கள்!!!

இதையும் தெரிந்துகொள்ளவோம் 👉👉 கோவிலுக்குள் செருப்பு போட கூடாது என்று சொல்ல காரணம் என்ன

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts