Night Blindness
ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவு பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் சுவாரஸ்யமான பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. பலரும் மாலைக்கண் நோய் என்று சொல்லி நாம் கேட்டிருப்போம். ஏன் நாம் படத்தில் கூட பார்த்திருப்போம். சரி ஏன் இந்த மாலைக்கண் நோய் வருகிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இரத்தம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..? |
Night Blindness Reason in Tamil:
மாலைக்கண் நோய் இருந்தால் 6 மணிக்கு மேல் கண் தெரியாது என்று நம் அனைவருக்குமே தெரியும். இதை Nyctalopia அல்லது Night Blindness என்று சொல்வார்கள்.
நாம் அனைவருமே இதை ஒரு நோய் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இது நம் கண்ணில் தேவையான சத்துக்கள் இல்லையென்றால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு என்று சொல்லப்படுகிறது. சரி ஏன் 6 மணிக்கு மேல் கண் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று இங்கு பார்ப்போம்.
நம் கண்களில் இருக்கும் ரெட்டினா ( Retina ) என்ற பகுதியில் வெளிச்சத்தை உணரக்கூடிய 2 முக்கியமான செல்கள் இருக்கின்றன.
- Rods Cells
- Cones Cells
இந்த 2 செல்களின் உதவியால் தான் நம்மால் பொருட்கள் எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது.
கொட்டாவி விட்டால் ஏன் கண்களில் தண்ணீர் வருகிறது தெரியுமா..? |
அதுபோல இந்த Rods செல்கள் வெளிச்சம் குறைவாக இருக்கும் நேரத்தில் கூட வேலை செய்கின்றன. ஆனால் Cones செல்கள் அப்படி இல்லை. இது வெளிச்சம் அதிகமாக இருக்கும் நேரத்தில் மட்டும் தான் வேலை செய்கின்றன.
உங்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு இருட்டான அறையில் குறைவான வெளிச்சம் இருந்தாலும் அங்கு இருக்கும் பொருட்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால் அந்த பொருட்களின் நிறம் என்னவென்று நம்மால் சொல்லமுடியாது. காரணம் Rods செல்களின் உதவியால் தான் வெளிச்சம் குறைவான இடத்தில் இருக்கும் பொருட்களை கூட நம்மால் பார்க்க முடிகிறது.
அதுவே இந்த Rods செல்களில் ஏதும் குறைபாடு ஏற்பட்டால் வெளிச்சம் குறைவான இடத்தில் இருக்கும் பொருட்கள் எதையும் நம்மால் பார்க்க முடியாது. இதை தான் நாம் மாலைக்கண் நோய் என்று சொல்கின்றோம். இதனால் தான் மாலை 6 மணிக்கு மேல் கண் தெரிவதில்லை.இறந்தவர்களை தூக்கி செல்லும் போது ஏன் பூக்கள் போடுகிறார்கள் தெரியுமா..? அதேபோல் பிணம் தூக்கி செல்லும் வாகனத்தில் சொர்க்க ரதம் என்று பெயர் வைக்க காரணம் என்ன..? |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |