பூனை நம்மை கடித்து விட்டால் என்ன செய்வது? என்ன சாப்பிட கூடாது ?

Advertisement

பூனை கடித்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? பூனை கடித்தால் என்னென்ன சாப்பிட கூடாது? – Poonai Kadithal Enna Seiya Vendum

பொதுவாக மனிதர்கள் பலர் அவர்களுக்கு பிடித்த விலங்குகளை செல்லப்பிராணியாக வைத்து வளர்ப்பார்கள். அவற்றில் ஒன்று தான் பூனை. பூனையை பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்ப்பார்கள். அத்தகைய பூனை ஒருவேளை கடித்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து இப்பொழுது நாம் இந்த பதிவின் மூலமாக படித்தறியலாம் வாங்க.

பூனை கடித்தால் ஏற்படும் பாதிப்புகள்:

கடிபட்ட இடத்தில் இரத்தம் வடிதல், உடம்பில் தேமல், உடம்பு முழுவது எதோ ஊறுவது போல் ஒரு உணர்வு, அரிப்பு தன்மை, ஒருவகையான ஊறலுடன் நோய், வம்பில் சிறு சிறு கொப்பளங்கள், உடம்பில் ஒருவகையான துர்நாற்றத்துடன் வெளியேறக்கூடிய நீர்..  பூனைக்கடியினால் நமது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு குளிர் காய்ச்சல், ஜானி இவையெல்லாம் ஏற்படும். ஆக வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வளர்க்காமல் இருப்பது மிகவும் சிறந்து.

ஏன் என்றால் பூனையை வீட்டில் வளர்த்தால் பூனையின் உடம்பில் இருந்து உதிரும் முடி குலந்திகளுக்கும் சரி பெரியவர்களுக்கு சரி உடலில் ஒவ்வாமையை ஏற்படும். மேலும் ஆஸ்துமா நோய் அதிகரிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நாய் கடித்தால் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?

மூலிகை மருந்து:

கீழாநெல்லி இலை 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் இரண்டு கிராம், ஓமம் ஒரு ஸ்பூன் மற்றும் நல்லெண்ணெய் 100 மில்லி இந்த பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் ஒரு கிடாய் வைத்து அதில் 100 மில்லி நல்லெண்ணெய்யை சேர்க்கவும், பின் கீழாநெல்லி இலை, கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஓமம் ஆகியவற்றை இடித்து அடுப்பில் வைத்துள்ள நல்லெண்ணெயில் சேர்த்து நேரம் மாறும் வரை காய்ச்ச வேண்டும்.

எண்ணெயின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து நன்கு ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

வடிகட்டிய பொருட்களை தூக்கி எறிந்துவிட வேண்டாம் அதனை அரைத்து கடிபட்ட இடத்தில் பூசவும். அதேபோல் காச்சிய எண்ணெயை ஒரு ஸ்பூன் அளவு அருந்தவும்.

இவ்வாறு செய்வதினால் கடித்த இடத்தில் விஷம் இருந்தால் அவை வெளியேறிவிடும். இரத்தத்தில் கலந்துள்ள விஷங்கள் எண்ணெய்யின் மூலம் முறியடிக்கப்டும்.

பூனை கடித்தால் என்னென்ன சாப்பிட கூடாது?Poonai Kadithal Enna Seiya Vendum

பூனை கடிக்கு மேல் கூறப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை செய்தாலே போதும். பூனை கடிக்கு சாப்பிட கூடாத உணவுகள் என்று எதுவும் இல்லை. இருப்பினும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பெரியவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்வது நல்லது. இந்த மூலிகை பயன்படுத்தியும் எந்த ஒரு பயன்களும் இல்லை என்றால் அல்லது மூலிகை வைத்தியத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.

ஏன் என்றால் இது போன்ற விஷயங்களில் நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது. அப்படி அலட்சியமாக இருந்தோம் என்றால் நாம் தான் பலவகையான வியாதிகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். ஆக ஏதாவது விலங்குகள் உங்களை கடித்துவிட்டது என்றால் உங்களுடைய மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது தான் மிகவும் சிறந்தது.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement