Scientific Reason Behind Cat Crossing in Tamil
இன்றைய அறிவியல் காலகட்டத்திலும் நல்ல சகுனம் கெட்ட சகுனம் பார்க்கும் பழக்கத்தை நம்மில் பலரின் வீட்டிலையும் பின்பற்றுகிறார்கள். அப்படி நாம் பார்த்து பின்பற்றும் அனைத்து கெட்ட சகுனங்களுக்கு பின்னாலும் எதாவது ஒரு அறிவியல் காரணம் இருக்கும்.
அந்த வகையில் இன்றைய பதிவில் பூனை குறுக்கே சென்றால் அந்த வழியில் செல்லக்கூடாது என்று சொல்லுவதற்கான உண்மை காரணம் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
What is the Reason Behind Cat Crossing in Tamil:
இன்றைய காலகட்டத்தில் கூட பலரும் கெட்ட சகுனங்களை பார்ப்பதை பின்பற்றுகிறார்கள். அப்படி நாம் கெட்ட சகுனம் என்று கூறும் எந்த ஒரு செயலும் கெட்ட சகுனமே கிடையாது. அவற்றிற்கு பின்னால் ஏதாவது ஒரு நல்ல காரணத்தை வைத்து தான் நமது முன்னோர்கள் கூறியிருப்பார்கள்.
இதையும் படித்துபாருங்கள்=> கெட்ட சகுனங்களுக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா
அதனால் இனிமேலாவது கெட்ட சகுனங்கள் பார்ப்பதை தவிர்க்கலாம். அதேபோல் பூனை குறுக்கே சென்றால் தொடர்ந்து செல்லாதீர்கள் என்று கூறுவார்கள் அதற்கான உண்மை காரணத்தை பற்றி பார்க்கலாம்.
Scientific Reason Behind Cat Crossing in Tamil:
பொதுவாக அரசர்களின் காலத்தில் போருக்கு செல்லும் பொழுது பெரும் படையுடன் தான் செல்வார்கள். அப்படி படையுடன் செல்லும்பொழுது பூனை குறுக்கே சென்றால் அந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளது அங்குள்ள ஆண்மகன்கள் அனைவரும் போருக்கு சென்றிருப்பார்கள் என்று அர்த்தம்.அப்படி என்றால் அந்த பகுதியில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மட்டும் தான் இருப்பார்கள். அதனால் அந்த பகுதியை நாம் நம்முடைய படையுடன் கடந்து சென்றால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் படையை திருப்பி வேறு வழியில் செல்லுவார்கள்.
இதையும் படியுங்கள்⇒ தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்குமா..! சுழிகளின் பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்
Scientific Reason Behind Cat Crossing in Tamil:
பூனை குறுக்கே சென்றால் தொடர்ந்து செல்லாதீர்கள் என்று கூறுவதற்கான மற்றொரு காரணமும் உள்ளது. முன்னோர்கள் காலத்தில் வண்டி, கார் எதுவும் இல்லாததால் மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டியில் பயணம் செய்வார்கள்.அப்படி பயணம் செய்யும் போது பூனை குறுக்கே வந்தால் அதனுடைய கண்ணை பார்த்த மாடு அல்லது குதிரை பயந்து இருக்கும் என்பதால் சிறிது நேரம் அதை தண்ணீர் குடிக்க வைத்து அலைத்து செல்வார்கள்.
இவைகளே பூனை குறுக்கே சென்றால் தொடர்ந்து செல்லாதீர்கள் என்று கூறுவதற்கான உண்மையான காரணங்கள் ஆகும்.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |