கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதற்கான அறிவியல் காரணம் இது தானா..!

Advertisement

கோவில்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை பொறுத்தவரை பெண்கள் அதிகமாக நம்பிக்கை வைப்பது என்றால் அது கடவுள்களின் மீது தான். பொதுவாக நமக்கு நன்மை அல்லது தீமை இவற்றில் எது நடந்தாலும் முதலில் மனதில் நினைப்பது கடவுள் தான். அதிலும் ஒவ்வொருவருவருக்கும் வெவ்வேறு மாதிரியான கடவுள் பிடித்து இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் இருக்கிறது. நாம் கோவிலுக்கு செல்லும் போது கடவுளுக்கு அபிஷேகம் செய்வதற்கு என்று நிறைய பொருட்களை வாங்கி கொண்டு செல்வோம். அதனை தொடர்ந்து அபிஷேகம் முடிந்த உடன் கடவுளை வணங்கி விட்டு வீட்டிற்கு வந்து விடுவோம். இவை தான் எல்லோருக்கும் ஒரு பொதுவான செயலாக இருக்கிறது. ஆனால் அபிஷேக பொருட்களை கொண்டு கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதற்கான ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. ஆகாயம் அது என்ன காரணம் என்று இன்றைய பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

ஏன் கோவிலுக்கு செல்லும்போது கோவில் வாசல் படியை தொட்டு கும்பிட்டு செல்கின்றனர் தெரியுமா..?

கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதற்கான அறிவியல் காரணம்:

கோவில் சிலை

நாம் இதுநாள் வரையிலும் நிறைய கோவிகளுக்கு சென்று இருப்போம். அந்த கோவில்கள் அனைத்திலும் கடவுள்களுக்கு மஞ்சள்தூள், பன்னீர், தயிர், பால், சந்தனம், இளநீர் மற்றும் அரிசி மாவு போன்றவற்றையினை தண்ணீரில் பயன்படுத்தி அபிஷேகம் செய்வது ஒரு வழக்கமாக இருக்கிறது.

இந்த அபிஷேகம் என்பது அனைத்து கோவில்களிலும் வழக்கமாக இருந்தாலும் கூட இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது.

நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் ஒரு அறிவியல் காரணத்தை உணர்த்தும் வகையில் கூறியிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதற்கான அறிவியல் காரணம் என்ன..?

கோவில்களில் உள்ள அனைத்து வகையான சிலைகளும் கற்களால் செதுக்கப்பட்ட சிலை ஆகும். அத்தகைய சிலைகள் அனைத்திலும் நாள் ஆக ஆக காற்றின் ஈரப்பதம் குறைந்து வெடிப்பு வர ஆரம்பமாகிவிடும்.

 சிலைகளில் வெடிப்பு வராமல் இருப்பதற்கு அதனுடைய எதிர் மின்னூட்டியின் ஆற்றல் அதிகரிக்க வேண்டும். அப்போது தான் கோவில் சிலைகளுக்கு அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் அது சிலையின் ஈரப்பதத்தையும் மற்றும் எதிர் மின்னூட்டியின் ஆற்றலையும் அதிகரிக்க செய்து சிலையில் வெடிப்பு எதுவும் வராமல் இருக்க செய்யும் என்பதே கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதற்கான அறிவியல் காரணம் ஆகும்.  
கோவிலில் ஏன் தேங்காய் உடைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement