Valaikappu Reason in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு அணிவதற்கான அறிவியல் காரணம் என்னவென்றுதான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு கருத்தரித்து ஏழாவது மாதம் அல்லது ஒன்பதாவது மாதங்களில் கணவன் வீட்டில் வளைகாப்பு அணிந்து தாய் வீட்டிற்கு வருவார்கள். இந்த வளைகாப்பு அணிவது பாரம்பரியமாக நடக்கிறது. ஆனால் அதற்கான அறிவியல் காரணத்தை நம் முன்னோர்கள் முன்னதாகவே அறிந்துள்ளார்கள், மேலும் வளைகாப்பு அணிவதற்கான காரணம் என்னவென்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
பிரசவத்தின் போது தாய் வீட்டுக்கு செல்ல காரணம் என்ன..? |
Scientific Reason for Baby Shower in Tamil:
பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏழாவது மாதங்களிலும் , ஒன்பதாவது மாதங்களிலும் வளைகாப்பு அணிந்து வருவார்கள். ஆனால் இதற்கான அறிவியல் காரணம் என்னவென்று தெரிந்துகொள்ளாமல், இதை ஒரு மரபு என்று நினைத்துக்கொண்டு அதை நாம் தொடர்ந்து பின்பற்றி கொண்டிருக்கிறோம்.
நம் முன்னோர்கள் எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் பொழுதும் அதில் அறிவியல் காரணங்கள் இல்லாமல் இருக்காது. பொதுவாக எல்லா விஷயங்களிலும் அறிவியல் காரணங்கள் புதைந்து தான் இருக்கும். ஆனால் அதை நாம் தெரிந்து கொள்வதே இல்லை. இப்பொழுது வளைகாப்பு அணிவதற்கான காரணம்என்னவென்று தெரிந்து கொள்வோம்.
தற்பொழுது வெளிநாடுகளில் டால்பின் மீன்களை கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு பிசியோதைரபிகள் செய்யப்படுகிறது. ஆனால் இது பலருக்கும் தெரியாது. இவை எதனால் செய்யப்படுகிறது என்றால், குழந்தைகள் பொதுவாக ஏழு மாதங்களுக்கு பிறகு முழு வளர்ச்சியை அடைந்திருக்கும், அப்படி இருக்கும் நேரங்களில் டால்பின் மீன் சத்தங்களை கருவில் இருக்கும் குழந்தைகள் கேட்கும் பொழுது அதனுடைய நரம்புகள், மூளைகள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்குமாம். ஆனால் இதற்கும் வளைகாப்பு அணிவதற்கும் என்ன அர்த்தம் என்று யோசிக்கிறீர்களா.?
டால்பின் மீன்களின் சத்தமும், கண்ணாடி வளையல்ளின் ஒலியும் ஒரே ஒலிகளை கொண்டதால், அந்த ஒலிகளை கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கேட்கும் பொழுது குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் தான் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. மேலும் அவர்கள் எந்த வேலைகள் செய்யும் பொழுதும், அந்த வளையல் சத்தத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்றும் கூறப்படுகிறது. இதை தான் அறிவியல் காரணம் என்று சொல்லப்படுகிறது.
நகை அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |