நம்முடைய கண்களுக்கு மேலே புருவங்கள் இருப்பதற்கான அறிவியல் காரணம் எது தானா..!

eyebrows information in tamil

Eyebrows Information in Tamil

வணக்கம் நண்பர்களே..! நமது உடலில் ஒவ்வொரு வகையான உடல் உறுப்புகள் இருக்கின்றன. அத்தகைய உடல் உறுப்புகள் அனைத்துமே நாம் நலமுடன் வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று நம்முடைய இரண்டு கண்கள். அந்த கண்களுக்கு மேலே இரண்டு புருவங்கள் இருப்பதற்கான அறிவியல் காரணம் என்னவென்று இன்றைய பொதுநலம். காம் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ மழை நீரை குடிக்கலாமா? அப்படி குடித்தால் இதெல்லாம் வருமா..? வாங்க தெரிந்துகொள்ளலாம்..!

கண்களுக்கு மேலே புருவம் இருப்பதற்கான அறிவியல் காரணம்:

kan puruvam

கருப்பு நிறத்தில் மிகவும் மெலிதான முடிகளால் நம்முடைய இரண்டு கணங்களுக்கு மேலே வளைந்த வடிவமாக இருப்பது தான் புருவம் ஆகும்.

இந்த புருவம் கண்களை பாதுகாக்கும் ஒரு பாதுக்காப்பு வளையமாக இருக்கிறது என்று அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது.

இத்தகைய புருவம் கண்களுக்கு மேலே இருக்கும் போது கண்களில் எந்தவித மாசுகளும் படியாமல் கண்ணை சுத்தமாக வைப்பதற்கு உதவுகிறது.

அதுபோல கண்கள் மற்றும் முகத்தில் இருக்கும் சிறு சிறு பள்ளங்களில் திரவத்தை நிரப்பி அதன் பிறகு அந்த திரவத்தை கண்களில் இருந்து வரும் கண்ணீர் மற்றும் வியர்வை வழியாக வெளியற்றும் வேலையை புருவம் செய்கிறது.

புருவம் திரவத்தை வெளியேற்றுவதன் மூலம் உங்கள் கண்களில் உள்ள தூசுக்களை வெளியேறி கண் பார்வையை நன்றாக வைப்பதற்கு உதவுகிறது என்று கூறப்படுகிறது.

தூசு, மழை, வெயில், காற்று போன்ற கண்களுக்கு அலர்ஜி ஏற்படும் சூழல்களில் இருந்து நம்முடைய கண்களை புருவம் பாதுகாக்கிறது.

முக பாவனைகள் மூலம் மற்றவர்களுக்கு செய்திகளை எடுத்து சொல்வதற்கு முகத்தில் உள்ள புருவங்கள் காரணமாக இருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக சொல்லப்படுகிறது.

சில நேரத்தில் வியர்வை நம்முடைய கண்களுக்கு மேலே வந்து நின்று அதன் பிறகு நம்முடைய கண்களில் படும்போது ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் அந்த உப்பு வியர்வை கண்களில் படாதவாறு பார்த்துக்கொள்ளவும்.

இது உங்களுக்கு தெரியுமா 👉👉😨 இடி இடிக்கும் போது ஏன் “அர்ஜுனா” என்று சொல்கிறோம் காரணம் தெரியுமா..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் Facts