ஏன் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது அதற்கான அறிவியல் காரணம் தெரியுமா..?

scientific reason for not sleeping facing north in tamil

வடக்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, ஆரோக்கியம் மற்றும் தூக்கம் இவை அனைத்தும் மிகவும் முக்கியான ஒன்று. இவற்றில் ஏதவாது ஒன்று இல்லை என்றாலும் கூட நாம் சராசரியான வாழ்க்கையை கூட வாழ முடியாது. அதிலும் எவ்வளவு தான் நாம் உழைத்தாலும் தூக்கம் என்பது நமக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஒரு வேளை நாம் அப்படி சரியாக தூங்கவில்லை என்றால் நமது உடலில் பல விளைவுகள் ஏற்படும் என்பது பலரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால் தூக்கம் என்று நாம் நினைப்பதில் சில அறிவியல் காரணங்களும் இருக்கிறது. அந்த வகையில் இன்று வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது என்று சொல்வதற்கான அறிவியல் காரணம் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

பெண்கள் தலையில் பூ வைப்பதற்கு காரணம் என்ன தெரியுமா.?

வடக்கு திசையில் தலை வைத்து படக்கூடாது என்பதற்கான அறிவியல் காரணம்:

வடக்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா

நாம் தினமும் நமது உடலுக்கு ஆரோக்கியமான நன்மை தரும் உணவுகளை பார்த்து பார்த்து சாப்பிடும் அந்த அளவிற்கு நமது தூக்கத்திலும் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

தினமும் நாம் உறங்கும் போது வடக்கே தலை வைத்து படுக்க கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவது ஒரு வழக்கமாக இருந்தது. அப்படி வடக்கே தலை வைத்து படுக்க கூடாது என்று கூறுவதற்கு பின்பு ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது.

அந்த காரணம் என்னவென்றால் நாம் வாழும் பூமியை காந்தம் என்பார்கள். காந்தம் என்றாலே இரு துருவருங்களும் எதிர் எதிர் திசையில் இருக்கும். அதுபோல நமது உடலில் மூளை இருக்கும் பகுதியினை வடக்கு திசை என்றும் கால் பகுதியினை தெற்கு திசை என்றும் சொல்லப்படுகிறது. 

 இப்படி நமது உடல் இரண்டாக பிரிந்து எதிர் எதிர் திசையில் செயல் படுவதனால் வடக்கே காந்த மண்டலம் இருப்பதால் நாம் அந்த பக்கம் தலை வைத்து படுக்கும் போது நமது மூளையில் உள்ள நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என்ற அறிவியல் காரணத்தினால் நம் முன்னோர்கள் வடக்கே தலை வைத்து படுக்க கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.  

ஒரு வேளை அப்படி வடக்கே தலை வைத்து படுப்பதினால் நமது தலையில் ஏதவாது பிரச்சனை, ஞாபக மறதி மற்றும் தூக்கத்தில் பிரச்சனை போன்ற பின் விளைவுகள் வரும் என்பதும் நம்முடைய முன்னோர்களின் கருத்தாக இருந்தது.

அதனால் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டியும் அல்லது தெற்கே தலை வைத்து வடக்கேகால் நீட்டியும் படுத்தால் நல்லது.

இதையும் படியுங்கள் 👇 👇 👇

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் நமக்கே தெரியாத பல அறிவியல் காரணங்கள்.!

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts